சிங்கப்பூர் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்ற திரு லாரன்ஸ் வோங்குக்கு சீனப் பிரதமர் லி சியாங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரும் சீனாவும் நட்பு நாடுகள், இரு நாடுகளும் ஒற்றுமையாகச் செயல்பட்டுப் பல துறைகளில் மேம்பட்டுள்ளதாகத் திரு லி கூறினார்.
மேலும் சீனாவும் சிங்கப்பூரும் இணைந்து வட்டார அளவிலும் அனைத்துலக அளவிலும் செயல்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளின் ஒத்துழைப்பால் வட்டாரத்தில் அமைதி, நிலைத்தன்மை, செழிப்பு, வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் திரு லி குறிப்பிட்டார்.
இரு நாடுகளும் அதன் 35 ஆண்டுகால அரசதந்திர உறவைக் கொண்டாடும் நேரத்தில் திரு வோங்குடன் இணைந்து பரஸ்பர அரசியல் நம்பிக்கை உள்ளிட்ட பல முக்கிய கொள்கை அடிப்படையில் செயல்படவுள்ளதாகத் திரு லி கூறினார்.

