தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பருவநிலை மாற்றத்துக்கான தீர்வுகளுக்கு அதிக முதலீட்டு ஆற்றல்

1 mins read
c823482d-901b-4e68-b24d-5d3b11662c5a
பருவநிலை மாற்றத்துக்குத் தயார்ப்படுத்திக்கொள்வதற்கான நிதி தற்போது ஆண்டுக்கு ஏறக்குறைய US$76 பில்லியனாக உள்ளது. - படம்: ஏஎஃப்பி

பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள தாக்கத்தைச் சமாளிக்க உலக நாடுகள் தயாராகிவரும் வேளையில், அடுத்த ஐந்தாண்டுகளில் ஆக அதிக முதலீட்டு ஆற்றலைக் கொண்ட பருவநிலைத் தீர்வுகள் புதியதோர் அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

உலகளாவிய நிர்வாக ஆலோசனை நிறுவனமான பிசிஜியும் சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான தெமாசெக்கும் புதன்கிழமை (மே 7) வெளியிட்ட அந்த அறிக்கை, பருவநிலை மாற்றத்துக்குச் சரிசெய்துகொள்வதற்கும் மீள்திறனுக்குமான செலவினம் 2030க்குள் ஆண்டுக்கு US$0.5 டிரில்லியனுக்கும் (S$0.65 டி.) US$1.3 டிரில்லியனுக்கும் இடைப்பட்டதாக உயரும் என முன்னுரைக்கப்பட்டுள்ளதைக் காட்டியது.

பருவநிலை மாற்றத்துக்குத் தயார்ப்படுத்திக்கொள்வதற்கான நிதி தற்போது ஆண்டுக்கு ஏறக்குறைய US$76 பில்லியனாக உள்ளது. இதில் பெரும்பகுதிக்கு அரசாங்கம் பங்கு வகிப்பதை அறிக்கை சுட்டியது.

ஆனால், பருவநிலை தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க தீர்வுகளைக் கொண்டு வருவதற்கான அதிகரிக்கும் தேவை, உலகம் முழுவதும் பருவநிலை தொடர்பான புத்தாக்கங்களைச் செயல்படுத்த நிறுவனங்களின் உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் வித்திடுவதாக அறிக்கை கூறியது. இது முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பை வழங்குகிறது.

குறிப்புச் சொற்கள்