சிஓஇ ‘ஏ’ பிரிவுக்கான கட்டணம் $126,009

சிஓஇ ‘ஏ’ பிரிவுக்கான கட்டணம் $126,009

1 mins read
88739e86-dbdb-462a-bd89-8a30d4ecd81a
‘ஏ’ பிரிவுக்கும் ‘பி’ பிரிவுக்கும் இடையிலான சிஓஇ கட்டண வித்தியாசம் $980தான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) ‘ஏ’ பிரிவுக்கான கட்டணம் வியாழக்கிழமையன்று (ஜூன் 4) 1.4 விழுக்காடு அதிகரித்து, $126,009 என்று பதிவானது.

‘பி’ பிரிவு கார்களுக்கான சான்றிதழ் கட்டணம் 1.9 விழுக்காடு சரிந்து $126,989 என்று பதிவானது. அப்படி என்றால் ‘ஏ’ பிரிவுக்கும் ‘பி’ பிரிவுக்கும் இடையிலான கட்டண வித்தியாசம் $980தான்.

‘ஏ’ பிரிவில் இடம்பெற்றிருக்கும் சிறிய, அதிக சக்தி குறைந்த கார்கள், மின்சாரக் கார்கள் ஆகியவற்றுக்கான சான்றிதழ் கட்டணம் மே 20ஆம் தேதி நடந்த ஏலக்குத்தகையில் $124,229 என்று இருந்தது. அதே நாள் நடந்த ‘பி’ பிரிவுக்கான ஏலக்குத்தகையில் பெரிய, அதிக சக்தி வாய்ந்த கார்கள், மின்சாரக் கார்கள் ஆகியவற்றுக்கான சிஓஇ கட்டணம் $129,501 என்று இருந்தது.

பொதுப் பிரிவு வாகனங்களுக்கான ‘இ’ பிரிவில், கட்டணம் $130,000லிருந்து $129,000க்கு அதாவது 0.8 விழுக்காடு சரிந்தது.

மோட்டார்சைக்கிளுக்கான ‘டி’ பிரிவில் இரு வாரங்களுக்கு முன்பிருந்த கட்டணமான $9,689லிருந்து 3.2 விழுக்காடு உயர்ந்து ஜூன் 4ஆம் தேதி $10,000 ஆகப் பதிவானது.

வர்த்தக வாகனங்களுக்கான ‘சி’ பிரிவு கட்டணத்திலும் அதிகரிப்பு தென்பட்டது. முன்னைய ஏலக் குத்தகையில் பதிவான $92,223 கட்டணத்திலிருந்து ஜூன் 4ஆம் தேதி அது $94,000 என்று உயர்ந்தது.

குறிப்புச் சொற்கள்
கட்டணம்வாகன உரிமைச் சான்றிதழ்மின்சார கார்