‘சிஓஇ’ கட்டணம் உயர்வு: ‘ஏ’ பிரிவு $139,001 ஆகப் பதிவு

‘சிஓஇ’ கட்டணம் உயர்வு: ‘ஏ’ பிரிவு $139,001 ஆகப் பதிவு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

04 Nov 2026 - 7:57 pm

1 mins read

அண்மைய ஏலக்குத்தகையில் பெரும்பாலான பிரிவுகளுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் உயர்ந்துள்ளது.

புதன்கிழமையன்று ( நவம்பர் 19) நடைபெற்ற ஏலக்குத்தகையில், ‘ஏ’ பிரிவுச் சான்றிதழின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அது $139,001ஆகப் பதிவாகியுள்ளது.

கடந்த மாதம் பதிவான விலையைவிட இப்போது 5.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

சிறிய, குறைந்த இயந்திரத் திறன் கொண்ட கார்கள் மற்றும் மின்சார வாகனங்கள் ‘ஏ’ பிரிவில் வகைப்படுத்தப்படுகின்றன.

பெரிய, அதிக இயந்திரத் திறன் கொண்ட கார்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான ‘பி’ பிரிவுக் கட்டணம், $132,334ஆக உயர்ந்துள்ளது.

மோட்டார்சைக்கிள்களுக்கான ‘டி’ பிரிவுக் கட்டணம் $10,689 ஆகப் பதிவாகியுள்ளது.

பொதுப் பிரிவான ‘இ’ பிரிவுக் கட்டணம் $135,998ஆக அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்