வாகன உரிமைச் சான்றிதழ்க் (சிஓஇ) கட்டணங்கள் புதன்கிழமை (மார்ச் 18) அனைத்துப் பிரிவுகளிலும் அதிகரித்துள்ளன.
சிறிய கார்களுக்கான ‘ஏ’ பிரிவில், கட்டணம் 3.4 விழுக்காடு கூடுதலாகி $111,890 ஆனது. இதற்கு முன்பு (மார்ச் 4) அது $108,220ஆக இருந்தது.
மோட்டார்சைக்கிள் பிரிவில் கட்டணம் ஆக அதிகமாக 11.5 விழுக்காடு உயர்ந்தது. அது $8,602லிருந்து $9,589 ஆயிற்று.
பெரிய கார்கள், மின்வாகனங்களுக்கான ‘பி’ பிரிவில், உரிமைச் சான்றிதழ்க் கட்டணம், 1.4 விழுக்காடு ஏற்றங்கண்டு $115,568 ஆனது. இதற்கு முன்னர் அது $114,002ஆக இருந்தது.
பொதுப் பிரிவில், வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் 2.8 விழுக்காடு கூடி $118,119. முன்னர் அது $114,890ஆக இருந்தது.
சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் 2.6 விழுக்காடு அதிகரித்து $76,000லிருந்து $78,000 ஆயிற்று.
சிங்கப்பூரில் ஒருவர் வாகனத்தைச் சொந்தமாக வாங்கவும் பயன்படுத்தவும் வாகன உரிமைச் சான்றிதழைப் பெற வேண்டியது கட்டாயம்.

