தானியங்க வாகனச் சோதனையைத் தற்காலிகமாக நிறுத்த கம்ஃபர்ட் டெல்குரோவுக்கு உத்தரவு

தானியங்க வாகனச் சோதனையைத் தற்காலிகமாக நிறுத்த கம்ஃபர்ட் டெல்குரோவுக்கு உத்தரவு

படம்: எஸ்ஜிஆர்வி அட்மின்

08 Nov 2026 - 9:20 pm

1 mins read

பொங்கோல் வட்டாரத்தில் உள்ள சந்திப்பு ஒன்றில் ‘யு’ வளைவு சோதனைகளை மேற்கொள்வதிலிருந்து தானியங்கி வாகனங்களை நிறுத்திவைக்கும்படி கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனத்திடம் கூறப்பட்டுள்ளது.

அத்தகைய சோதனையில் ஈடுபட்டிருந்த தானியங்கி வாகனம் ஒன்று மற்றோரு வாகனத்துடன் மோதவிருந்தது.

இதற்குமுன் இம்மாதம் 5ஆம் தேதி, பொங்கோல் வட்டாரத்தில் கிராப் நிறுவனத்தின் தானியங்கி வாகனம் சாலைச் சந்திப்பில் திரும்பும்போது சிறுமி ஒருவரை மோதவிருந்தது.

பொங்கோல் ஃபீல்ட் வட்டாரத்தில் உள்ள சந்திப்பில் கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனத்தின் தானியங்கி வாகனம் நின்றுகொண்டிருப்பதைக் காட்டும் காணொளி ஃபேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) பதிவேற்றப்பட்டது.

அதையடுத்து தானியங்கி வாகனம், மற்றொரு வாகனத்தைக் கிட்டத்தட்ட மோதுவதைப் போல காணப்பட்டது.

சம்பவம் குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் விசாரிப்பதாகச் சொன்னது.

குறிப்புச் சொற்கள்