கடந்த மே மாதம் ஈசூனில் உள்ள சமூகப் பூனை ஒன்று மாண்டுகிடந்தது. அது துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாக நம்பப்பட்டது.
இந்நிலையில், அந்தப் பூனை சாலை விபத்தால் மாண்டிருக்கலாம் என்று தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்தது.
அதேபோல் தெம்பனிஸ் ஸ்திரீட் 81ல் மாண்டுகிடந்த மற்றொரு சமூகப் பூனையும் விபத்தால் மாண்டதாகப் பூங்காக் கழகம் கூறியது.
பூனைகள் மாண்டது குறித்து விசாரணை நடத்திய பிறகு பூங்காக் கழகம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) அறிக்கை வெளியிட்டது.
ஈசூனில் செல்லமாக அழைக்கப்பட்ட கிங்காங் பூனை ஈசூன் ஸ்திரீட் 51 அருகே மாண்டுகிடந்தது. அந்தப் பூனை முதலில் சாலையின் நடுவில் மாண்டு கிடந்ததாகவும் பின்னர் அதை வழிப்போக்கர் ஒருவர் சாலையோரம் தள்ளிவைத்தாகவும் விசாரணை அதிகாரி கூறினார்.
பூனைக்கு விபத்தால் ஏற்படக்கூடிய காயங்கள் இருந்ததாகவும் துன்புறுத்தலுக்கான அடையாளங்கள் உடலில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.