சிங்கப்பூரில் பென்கூலன் பள்ளிவாசலும் சிங்கப்பூர் நாகூர் சங்கமும் இணைந்து மதரஸா மாணவர்களுக்கான போட்டிகளை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) வெற்றிகரமாக நடத்தின.
எட்டு மதரஸாக்களைச் சேர்ந்த மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.
ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிசால் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிசால் (இடமிருந்து இரண்டாவது). - படம்: பென்கூலன் பள்ளிவாசல்
போட்டியில் பென்கூலன் பள்ளிவாசல் முதலிடத்தையும் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
சிங்கப்பூர் நாகூர் சங்கம் மூன்றாவது இடத்தில் வந்தது. நிகழ்ச்சியில் அனைத்து மதரஸாக்களையும் சேர்ந்த மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர், சமூகத் தலைவர்கள், இமாம்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.