தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனாவின் அரசாங்க வேலைகளில் சேர இளம் சீனர்கள் பெரும் எண்ணிக்கையில் போட்டி

2 mins read
496dd888-33ff-41cf-96df-6459b252f4ed
வாய்ப்புகள் குறைந்து வருவதால் இளைஞர்களிடையே வேலையின்மை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. - படம்: ஏஎஃப்பி

ஷென்ஸென்: சீனாவில் அரசாங்க வேலைகளுக்கான போட்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்நாட்டில் மில்லியன்கணக்கான பட்டதாரிகள் நிச்சயமற்ற தன்மை நிறைந்த கடினமான வேலைச் சந்தையில் நிலையான வேலைவாய்ப்பை நாடுகின்றனர்.

கடந்த வாரயிறுதியில், 2.6 மில்லியனுக்கு மேற்பட்ட ஆர்வமுள்ள பட்டதாரிகள், நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் ஒரு மணிநேரம் நீடித்த தேசிய அரசாங்கப் பணிகளுக்கான தேர்வில் அமர்ந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் ஆக அதிகமாகும்.

2025ல் தொடங்கும் 39,700 அரசு வேலைகளில் ஒன்றைப் பெறுவதற்கான தேடலில் இது அவர்களின் முதல் படியாகும். பொதுவாக, ஒவ்வொரு வேலைக்கும் சராசரியாக 65 பேர் போட்டியிடுகின்றனர்.

சீனாவில் சாதனை எண்ணிக்கையிலான பட்டதாரிகள் ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர் சந்தையில் ஒரு வேலைக்காகக் காத்திருக்கின்றனர். இந்நிலை இப்போது அரசாங்க சேவையையும் விட்டு வைக்கவில்லை.

வாய்ப்புகள் குறைந்து வருவதால் இளையர்களின் வேலையின்மை தொடர்ந்து அதிகமாக உள்ளது. அக்டோபரில் இந்த எண்ணிக்கை 17.1 விழுக்காடாக இருந்தது. இது உலக நிலவரத்தை விட அதிகமாக உள்ளது. மாணவர்கள் அல்லது குறைந்தநிலை வேலையில் இருப்பவர்களை கணக்கில் கொள்ளவில்லை.

அரசாங்க வேலை என்பது சீனாவில் ஒரு நல்ல தொழில் தெரிவாகப் பார்க்கப்படுகிறது.

நிலையான வருமானம் மற்றும் பலன்களை வழங்கும் இந்தப் பதவிகள் சில நேரங்களில் அவை வழங்கும் வேலை பாதுகாப்புக்காக மிக முக்கியமான கௌரவமாகக் கருதப்படுகிறது.

ஆனால் கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, பொருளியல் பாதிக்கப்பட்டு, வர்த்தகங்கள் தடுமாறியதால் அரசு வேலைகளின் புகழ் உயர்ந்துள்ளது.

2020 ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்தில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் தேசிய அரசாங்க சேவைத் தேர்வை எழுதினர்.

இந்த எண்ணிக்கை நான்கு ஆண்டுகளைக் கடந்து 2024ல், இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்