தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
அதேவேளையில் கூட்டுரிமை வீட்டு விலை தொடர்ந்து அதிகரிப்பு

ஆகஸ்டில் வாடகைக்கு விடப்பட்ட கூட்டுரிமை, வீவக வீடுகளின் எண்ணிக்கை குறைந்தது

2 mins read
2257f083-c7ba-42c5-a04f-cf8414fb89a3
வீவக வீடுகள், கூட்டுரிமை வீடுகள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாடகைக்கு விடப்பட்ட கூட்டுரிமை வீடுகளின் (கொண்டோமினியம்) எண்ணிக்கை ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் 14 விழுக்காடு குறைந்தது; அதே வேளையில் விலை தொடர்ந்து 0.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

எஸ்ஆர்எக்ஸ், 99.co ஆகிய சொத்து இணையவாசல்கள் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) வெளியிட்ட முன்னோட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், ஜூலை மாதத்தின் 8,136 வீடுகளுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் 6,994 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன.

வாடகை எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் 3.8 விழுக்காடு கூடியது. ஆனால், அது ஐந்தாண்டு ஆகஸ்ட் மாத சராசரி அளவைவிட 7.6 விழுக்காடு குறைவு.

35.2 விழுக்காட்டு வீடுகள் மத்திய வட்டாரத்துக்கு வெளியிலும் 34.5 விழுக்காட்டு வீடுகள் மத்திய வட்டாரத்திலும் 30.4 விழுக்காட்டு வீடுகள் மத்திய வட்டாரத்தின் மையப்பகுதியிலும் வாடகைக்கு விடப்பட்டன.

ஆகஸ்ட் மாதத்தில் கூட்டுரிமை வீட்டு வாடகை இரண்டாவது மாதமாக 0.3 விழுக்காடு அதிகரித்தது.

எனினும், ஒட்டுமொத்த வாடகை ஆண்டுக்கு 3.7 விழுக்காடு குறைந்தது.

இதற்கிடையே, வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் வாடகை முந்தைய மாதத்தைவிட ஆகஸ்ட்டில் 0.4 விழுக்காடு குறைந்தது.

முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் 0.5 விழுக்காடும் முதிர்ச்சியடையாத பேட்டைகளில் 0.4 விழுக்காடும் வாடகை குறைந்தது.

ஆண்டு அடிப்படையில் முதிர்ச்சியடைந்த பேட்டைகள் 4.5 விழுக்காடும் முதிர்ச்சியடையாத பேட்டைகள் 3.9 விழுக்காடும் அதிகரித்து, ஒட்டுமொத்த வாடகை ஆண்டுக்கு 4.2 விழுக்காடு கூடியது.

ஜூலை மாதத்தில் வாடகைக்கு விடப்பட்ட 2,993 வீவக வீடுகளுடன் ஒப்பிடுகையில், ஆகஸ்டில் 2,626 வீடுகளே வாடகைக்கு விடப்பட்டன. இது 12.3 விழுக்காடு குறைவு.

ஆண்டு அடிப்படையில் வாடகை எண்ணிக்கை 13.4 விழுக்காடு குறைந்தது. ஆகஸ்ட் மாதத்திற்கான ஐந்தாண்டு சராசரி அளவைவிட அது 4.3 விழுக்காடு குறைந்தது.

வீட்டு வகையைப் பொறுத்தவரை, 32.5 விழுக்காட்டு மூவறை வீடுகள், 39.3 விழுக்காட்டு நான்கு அறை வீடுகள், 22.7 விழுக்காட்டு ஐந்தறை வீடுகள், 5.6 விழுக்காட்டு எக்சிகியூட்டிவ் வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன.

குறிப்புச் சொற்கள்