தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நார்த் புவன விஸ்தாவில் கல்வி அமைச்சு கட்டடத்தின் கட்டுமான பணிகள் 2025ல் தொடங்கும்

2 mins read
a80d98f5-32d4-49b1-8a21-741f9d3f496b
புதிய 30 மாடிகளைக் கொண்ட கோ கெங் சுவீ கல்வி நிலையம் அதன் மதிப்பிடப்பட்ட 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் சுமார் 2,000 பணியாளர்களுக்கு இடமளிக்கும். - படம்: சாவ் பாவ்

கோ கெங் சுவீ நிலையத்துக்கான கட்டுமானம் 2025ல் தொடங்கும் என்று கல்வி அமைச்சு அக்டோபர் 22ஆம் தேதி தெரிவித்தது.

2029ஆம் ஆண்டில் தயாராகும், புதிய கட்டடம், நார்த் புவன விஸ்தா டிரைவில் அமைந்திருக்கும். அதில், பாலஸ்டியர், கிரேஞ்ச் ரோடு, கிம் மோ ஆகியவற்றில் உள்ள கல்வி அமைச்சின் தலைமையகக் கிளைகளுடன் பள்ளிக் குழும நிலையம், சிங்கப்பூர் சீன மொழிக்கான நிலையம், சிங்கப்பூர் ஆசிரியர்கள் பயிற்சிக் கழகம் ஆகியவற்றின் பணியாளர்களை உள்ளடக்கும்.

2010ஆம் ஆண்டு தேசிய தினப் பேரணியில், கல்வி அமைச்சின் புதிய கட்டடத்திற்கான திட்டங்களை முதன்முதலில் அப்போதைய பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார். 2023ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் நகர மறுசீரமைப்பு ஆணையத்திடம் இருந்து கல்வி அமைச்சு திட்டத்திற்கான மேம்பாட்டு ஒப்புதல்களைப் பெற்றது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 2024 ஜனவரி மாதம் செய்தி வெளியிட்டது.

சிங்கப்பூரின் ஆங்கில மொழிக் கழகம், கிம் மோவில் உள்ள சீன மொழிக்கான சிங்கப்பூர் நிலையம், கலைகளுக்கான சிங்கப்பூர் ஆசிரியர்கள் பயிற்சிக் கல்லூரி போன்ற சிறப்புக் கல்விக் கழகங்களும் இந்தப் புதிய கட்டடத்துக்கு மாற்றப்படும்.

இந்தக் கட்டடத்தில் கல்வி அமைச்சின் மரபுடைமை நிலையமும் சேர்க்கப்படும். அது இப்போது பாலஸ்டியர் ரோட்டில் உள்ள கல்வி அமைச்சின் கிளையில் உள்ளது.

“இந்த நடவடிக்கையானது அதன் பல்வேறு தலைமைச் செயலகத் தளங்களில் உள்ள பணியாளர்களை அருகிலுள்ள கல்வி அமைச்சு கட்டடத்துடன் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க அனுமதிக்கும். அத்துடன் தீவின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிலத்தை பிற பயன்பாட்டிற்காக விடுவிக்கும்,” என்றும் கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

“புதிய வளாகம் சிங்கப்பூரர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தின் அடையாளமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது,” என்றும் அது கூறியது.

குறிப்புச் சொற்கள்