தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெங்கா பிடிஓ வீடுகளுக்கு குளிரூட்டி வசதிகளை செய்ய கெப்பலுக்கு ஒப்பந்தம்

1 mins read
8063e497-c111-4e62-8992-fba89e777031
தெங்காவில் உள்ள மூன்று பிடிஓ திட்டங்களில் உள்ள 3,500 வீடுகளுக்கு கெப்பல் மையப்படுத்தப்பட்ட குளிரூட்டி வசதிகளை செய்யும். - கோப்புப் படம்: வீவக

தெங்காவில் தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) மூன்று வீடமைப்புத் திட்டங்களில் மையப்படுத்தப்பட்ட குளிரூட்டி வசதிகளை அமைத்து நிர்வகிக்க கெப்பல் சொத்து நிறுவனத்துக்கு இருபது ஆண்டு ஒப்பந்தக் குத்தகை வழங்கப்பட்டுள்ளது.

பிரிக்லேண்ட் வீவ், பிளாண்டேஷன் எட்ஜ் 1 மற்றும் 11, பிளாண்டேஷன் வெர்ஜ் ஆகிய குடியிருப்புத் திட்டங்களில் உள்ள 3,500 வீடுகளுக்கான குளிரூட்டும் கட்டமைப்பை கெப்பலின் உள்கட்டமைப்புப் பிரிவு அமைத்து, நிர்வகிக்கும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) செப்டம்பர் 30ஆம் தேதி தெரிவித்தது.

இந்த கட்டுமானத் திட்டங்களில் கட்டப்படும் வீடுகள் ஏற்கெனவே விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளன.

2027ஆம் ஆண்டின் இரண்டாவது அல்லது நான்காவது காலாண்டில் வீடுகள் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தெங்காவில் உள்ள வீடுகளில் குளிரூட்டும் மையம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கசிவு, உறைபனி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கெப்பல் நிறுவனத்துக்கு வீவக ஒப்பந்தக் குத்தகையை வழங்கியிருக்கிறது.

முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட குளிரூட்டி வசதிகளை பயனீட்டு நிறுவனமான எஸ்பி குழுமமும் டைகின் தயாரிப்பு நிறுவனமும் கையாண்டன.

இவ்வட்டாரத்தில் 260,000 டன்னுக்கும் மேற்பட்ட குளிரூட்டி வசதிகளை கெப்பல் செய்திருப்பதை வீவக சுட்டிக்காட்டியது.

2023ல் ஜூரோங் லேக் மாவட்டத்தில் பெரிய அளவில் புதிய குளிரூட்டும் ஆலையை அமைத்து நிர்வகிக்கும் 30 ஆண்டு ஒப்பந்தம் கெப்பலுக்கு வழங்கப்பட்டதையும் அது மேற்கோள்காட்டியது.

சிங்கப்பூர், சீனாவில் கேப்பிட்டாலேண்ட், பெரினியல் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றுக்கும் கெப்பல் குளிரூட்டும் வசதிகளை செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்