தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் குளிர்ந்த காலம் வந்தாலும் குளிர்ச்சி இருக்காது

2 mins read
83ba6825-326a-49f1-bdad-309eb0805801
லா நினா காலநிலையின்போது பசிபிக் பெருங்கடலில் கிழக்கு நோக்கி வீசும் காற்று பலமடையும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

லா நினா எனப்படும் காலநிலை சிங்கப்பூருக்குத் திரும்பும் என்று இவ்வாண்டு பிப்ரவரியில் சிங்கப்பூர் வானிலை சேவை நிலையம் தெரிவித்திருந்தது.

இந்த வானிலை நிகழ்வு, பொதுவாக மழையையும் குளிர்ச்சியையும் கொண்டு வரும்.

இருந்தாலும், நீண்டகால வெப்பம் காரணமாக, லா நினா வந்தாலும் சிங்கப்பூர் எதிர்பார்த்த அளவுக்கு குளிர்ச்சியாக இருக்காது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் வானிலை சேவை நிலையம் தெரிவித்தது.

எல் நினோ பருவநிலை காரணமாக அண்மைய மார்ச் முதல் மே வரையில் சிங்கப்பூரின் வெப்பமான மாதங்களாக இருக்கும்.

லா நினாவுக்கு மாறாக, எல் நினோவால், குறிப்பாக தென்கிழக்கு ஆசியா முதல் ஆஸ்திரேலியா வரை வறண்ட, வெப்பமான பருவநிலை ஏற்படும். அதே சமயத்தில் லா நினா, வழக்கமாக மழை, குளிர்ச்சியை கொண்டு வரும்.

இவை, சில வருடங்களுக்கு ஒருமுறை மாறி மாறி வருகின்றன, மேலும் இரண்டு கால நிலைகளும் ஒன்றாக எல் நினோ-தெற்கு அலைவு (என்சோ) என அழைக்கப்படுகிறது.

என்சோ என்பது உலகளாவிய இயற்கை காலநிலை சுழற்சி ஆகும். இது, உலகின் ஆகப்பெரிய கடல் படுகையான வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் காற்று மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

லா நினா நிகழ்வில், ​​வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பலத்த காற்று வீசும்.

லா நினா வானிலை நிகழ்வின்போது அல்லது அதற்குப் பிறகு, அதிகபட்ச மற்றும் சராசரி தினசரி வெப்பநிலை குறைகிறது. ஆனால் அதிக வெப்பநிலையும் ஏற்படலாம் என்று வானிலை சேவை நிலையம் தெரிவித்தது.

உதாரணமாக, 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நீடித்த கடைசி லா நினா நிகழ்வில், மே 13ஆம் தேதி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தது. 1983 ஆம் ஆண்டிலிருந்து இந்த காலநிலை காணப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்