கதவு கைப்பிடியைத் தொட்டால் கிருமி தொற்றுமா? தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்ட சிங்கப்பூர்

சீனாவில் கொரோனா கிருமித் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 490க்கு அதிகரித்துள்ளதாகவும் அங்கு கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,300ஐத் தாண்டிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சீனாவுக்கு வெளியே இந்த கிருமித் தொற்று அதிகம் ஏற்பட்டிருக்கும் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில், கிருமித் தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பொது இடங்களைச் சுத்தப்படுத்தும் பணியை நகர மன்றங்கள் தீவிரப்படுத்தியுள்ளன.

மின் தூக்கிகளில் உள்ள பொத்தான்கள் நாளுக்கு மூன்று முறை கிருமிநாசினி கொண்டு துடைக்கப்படுவதுடன், மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய விளையாட்டுத் திடல்கள், உடற்பயிற்சி இடங்கள், இருக்கைகள், தடுப்புச் சட்டங்கள் போன்றவையும் தூய்மைப்படுத்தப்படுகின்றன.

இவ்வேளையில், கொரோனா கிருமி தொற்றுவது பற்றி தொற்றுநோய்த் துறை நிபுணர்களான டியூக்-என்யுஎஸ் மருத்துவக் கல்லூரியின் புதிய தொற்றுநோய் திட்டத்தின் இயக்குநரான பேராசிரியர் வோங் லின் ஃபா, தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹொக் பொது சுகாதாரப் பள்ளியின் திட்ட இயக்குநராகிய இணைப் பேராசிரியர் ஸு லி யாங் இருவரும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த குறிப்புகள்:

1. கதவு கைப்பிடியைத் தொடுவதன் மூலம் கிருமி தொற்றுமா?

கிருமி தொற்றியவரின் வீட்டுக் கதவு கைப்பிடியில் கொரோனா கிருமி காணப்பட்டதாக அண்மைய செய்தி ஒன்று குறிப்பிட்டது.
தும்மல், சளி போன்றவற்றால் உடலிலிருந்து வெளியேறும் திரவத்துளிகள் மூலமே இக்கிருமி பெரும்பாலும் பரவுவதாகவும், அது ஓரிடத்தில் படியும்போது அந்த இடத்தை தொடுவதன் மூலம் அது தொற்றும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். திரவத்துளி மூலம் பரவுவதைவிட, தொடுவதன் மூலம் தொற்று ஏற்படும் ஆபத்தே அதிகம் என தாம் நம்புவதாக பேராசிரியர் வோங் கருதுகிறார்.
“கிருமியுள்ள திரவத் துளிகள் காற்றின் மூலம் ஒருவரை அடையும் சாத்தியம் மிகக் குறைவு. பாதிக்கப்பட்ட முகத்துக்கு நேரே, அல்லது வெகு அருகில் இருமினால் அல்லது பாதிக்கப்பட்டவர் மின்தூக்கிக்குள் இருமி, 30 விநாடிகளுக்குள் அதில் நுழைந்தால் திரவத்துளி மூலம் கிருமி தொற்றும்.
கிருமித் தொற்றத் தவிர்க்க, முடிந்தவரை கூட்டமான இடங்களைத் தவிர்க்க வேண்டும்.
அப்படிச் செல்ல வேண்டியிருந்தால், மின்தூக்கிகள், பொதுக் கழிவறைகள் போன்ற இடங்களில் எதையும் தொடாமல் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று பேராசிரியர் வோங் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் 30 விநாடிகளுக்கு அல்லது ஒரு நிமிடத்துக்கு முன்னர் பயன்படுத்திய மின்தூக்கியில் சென்றால் அவர் இருமிய காற்றைச் சுவாசிப்பதன் மூலம் கிருமி தொற்றும் சாத்தியம் மிகக் குறைவு. ஆனால், மின்தூக்கி பொத்தான்களைத் தொடுவதனால் கிருமி தொற்றும் சாத்தியம் அதிகம். எல்லாரும் முகக் கவசம் அணிகிறார்கள். ஆனால் தங்கள் கைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதில்லை.
அதேபோல் காரின் கதவுகளைத் திறந்து, மூடிய பின்னர் கைகளைச் சுத்தம் செய்யம் வேண்டும். பயணி இறங்கிய பின்னர் வாகனமோட்டிகள் காரின் கண்ணாடிகளைத் திறந்து காற்றோட்டம் ஏற்படுத்த வேண்டும் என்றார் பேராசிரியர் வோங்.

2. கழிவறையின் மூலம் பரவுமா?
ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுவது சாத்தியம் என்று குறிப்பிட்ட பேராசிரியர் வோங், சார்ஸ் தொற்றை உதாரணமாகக் குறிப்பிட்டார். 2003ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் 300க்கும் அதிகமானோருக்கு சார்ஸ் கிருமித் தொற்று கழிவுநீர்க் கால்வாய்கள் மூலம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கழிவறை ஈரமாக இருந்ததால் அங்கு கிருமி தங்குவது சாத்தியமானது என்பதையும் அவர் குறிப்பிட்டார்
சார்ஸ் அவ்வாறே, மின்தூக்கிகள், படிக்கட்டுகள் போன்ற பொது இடங்களில் பரவியது.

3. இளையர்கள் எளிதில் பாதிக்கப்படுவார்களா?
30, 40 வயதுகளில் இருப்பவர்களுக்கு கிருமி தொற்றியுள்ளது. ஹாங்காங்கில் உயிரிழந்தவருக்கு வயது 39. கொரோனா கிருமி பாதிப்பு மோசமாக இருப்பது அல்லது அதனால் உயிரிழந்தவர்களில் 80 முதல் 90 விழுக்காட்டினர் வயதானவர்கள் அல்லது உடல்நிலை பாதிப்புள்ளவர்கள்.

4. வேகமாகப் பரவும் தொற்றுநோயா?
கொரோனா கிருமித் தொற்று வேகமாகப் பரவுவதாகத்தெரிவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு நாட்டில் அல்லது உலகத்தில் நோய் அதிகமானோரைப் பாதிக்கும்போது அது தொற்றுநோய் எனக் கொள்ளப்படும்.

5. வெப்பநிலை அதிகரிக்கும்போது கொரோனா கிருமி வலுவிழக்குமா?
குளிர்ச்சியான சூழலில் கிருமி எளிதாக தொற்றும் எனக் கருதப்படுகிறது.
குளிர்ச்சியான, வறண்ட காற்று, சளிக் கிருமியும் மனிதர்களைப் பாதிக்கும் கொரோனா கிருமியும் அதிகமாக பரவக் காரணமாக உள்ளது என்று பேராசிரியர் ஸு கூறினார். அதனால்தான் ஆண்டுதோறும் குளிர்காலத்தில் குளிர் காய்ச்சல் ஏற்படுகிறது.
திய கிருமி குறித்து அதிகம் தெரியவில்லை. எனினும், குளிர்காலம் காரணமாகவும் இருக்கலாம்.
ஆனால், சிங்கப்பூரில் குளிர்காலம் இல்லை. மேலும் ஆண்டு முழுவதும் குளிர் காய்ச்சல் ஏற்படுகிறது என்பதையும் அவர் சுட்டினார்.

#தமிழ்முரசு#கொரோனா#கிருமி#தொற்று#குறிப்புகள்#சிங்கப்பூர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!