இறந்து பிறந்த குழந்தை புதைக்கப்பட்ட விவகாரத்தில் 15 வயது பெண்ணிடம் மரண விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
14 வயது காதலனால் கர்ப்பமான சிறுமி, படுக்கை அறையில் தனியாக ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்த குழந்தையை பின்னர் அவர் தனது வீட்டுத் தோட்டத்தில் புதைத்துவிட்டார்.
2021 ஜூன் மாதத்தில் குழந்தை பிறந்தது. ஆனால் ஒரு வருடத்திற்குப் பிறகு 2022 ஏப்ரலில் குழந்தையின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சிறுமி தான் செய்ததை பின்னர் ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில் டிசம்பர் 23ஆம் தேதி மரண விசாரணை தொடங்கியது.
இது போன்ற சம்பவம் 33 ஆண்டுகளில் தாம் பார்க்கவில்லை என்று விசாரணை அதிகாரி குறிப்பிட்டார்.
இவ்வழக்கின் ஒரே சாட்சியான காவல்துறை ஆய்வாளரான தனபாலன் கோதண்டபாணி, வயது வராதவர்கள் பாலியல் உறவில் ஈடுபட்டதால் கர்ப்பமானது குறித்து புகார் வந்ததால் இவ்விவகாரம் தெரிய வந்ததாக மரண விசாரணை அதிகாரியான ஆடம் நகோடவிடம் தெரிவித்தார்.
பிப்ரவரியில் குழந்தையின் தந்தைக்கு சிறுமியுடன் உடலுறவு கொண்டதற்காகவும் சிசுவை புதைத்துவிட அக்காதலியைத் தூண்டியதற்காகவும் 21 மாதம் நன்னடத்தைக் கண்காணிப்பில் இருக்க உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே பெற்றோரின் வயது காரணமாக அவர்களுடைய பெயர்களை வெளியிட மரண விசாரணை அதிகாரி தடை விதித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
2022 ஏப்ரலில் குழந்தையின் தாயும் தாய்வழியிலான தாத்தாவும் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேல்நிலைப் பள்ளியில் இருவரும் நண்பர்களானதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. 2020 மே மாதத்திலிருந்து அவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகரித்தது.

