தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலிக்குச் செல்ல ஓங் பெங் செங்கிற்கு நீதிமன்றம் அனுமதி

1 mins read
4c2eb6dc-1eaa-4efb-b152-48655f254b9c
2024 அக்டோபர் 30ஆம் தேதி அரசு நீதிமன்ற வளாகத்தில் ஓங் பெங் செங். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஏப்ரல் 28 முதல் மே 16 வரை பயணம் செய்ய சொத்துச் சந்தை செல்வந்தர் ஓங் பெங் செங் செய்திருந்த விண்ணப்பத்தை ஏற்று மாவட்ட நீதிமன்றம் ஒன்று அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வழக்கு ஒன்றில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் ஓங், 79, பணி நிமித்தமாக லண்டன், பாஸ்டன், மயாமி, நியூயார்க், ஃபுளோரன்ஸ் ஆகிய நகர்களுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுவதாக அரசு நீதிமன்ற இணையப்பக்கம் குறிப்பிட்டுள்ளது.

அறிவிக்கப்படாத மருத்துவக் காரணங்களுக்காக ஓங் அமெரிக்காவுக்குச் செல்லவிருப்பதாக வியாழக்கிழமை (ஏப்ரல் 24) நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மலேசியரான ஓங்கின் தற்போதைய பிணைத் தொகையான $800,000 இரட்டிப்பாக்கப்பட்டு $1.6 மில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வழக்கைக் கையாளும் விசாரணை அதிகாரியிடம், தமது தங்குமிடம் குறித்த முழு விவரங்களையும் தொடர்பு எண்களையும் ஓங் வழங்க வேண்டும்.

விசாரணை அதிகாரியுடன் ஓங் தொடர்பில் இருக்க வேண்டியதுடன், சிங்கப்பூர் திரும்பிய 24 மணி நேரத்திற்குள் தமது கடப்பிதழை அந்த அதிகாரியிடம் அவர் ஒப்படைக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்