தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடன் அட்டை கடனில் சிக்கிக் கொள்ளும் சிங்கப்பூரர்கள்

2 mins read
cce9ead7-caa1-4910-9b22-6bfced37bc97
2024ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் செலுத்தப்படாத தொகை 7.9 பில்லியன் வெள்ளியை எட்டியிருப்பதாக சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தகவல் தெரிவிக்கிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்கள், கடன் அட்டை மூலம் அதிகமாக செலவழித்து மேலும் கடனில் சிக்கிக் கொள்கிறார்கள்.

கடன் அட்டை மூலம் வசூலிக்கப்படும் விண்ணைத் தொடும் விகிதங்கள், ‘மறைக்கப்பட்ட, மறைமுகமான கொலையாளி’ என்று சிங்கேப்பிடல் ஆலோசனை நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆல்ஃபிரட் சியா குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் நாணய ஆணைத்தின் தகவலின்படி, 2024ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் கடன் அட்டைக்கு செலுத்த வேண்டிய மாதாந்திரக் கட்டணத்தின் நிலுவைத் தேதிக்குள் செலுத்தப்படாத தொகை 7.9 பில்லியன் டாலரை எட்டியது.

2023ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டின் ஏழு பில்லியன் வெள்ளியுடன் ஒப்பிடுகையில் தற்போது கூடியிருக்கிறது.

மொத்த கடன் அட்டை கட்டணங்களும் அதிகரித்து, 2024ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து 1.3 விழுக்காடு அதிகரித்து மூன்றாம் காலாண்டில் $24 பில்லியனைத் தொட்டது.

ஆனால், கொவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து மக்கள் பயணம் மற்றும் உணவருந்துவதற்கு அதிகம் செலவு செய்வதால் கடன் அட்டை பரிமாற்றங்களின் நிலுவை அதிகரிப்பு இயல்பு நிலைக்கு திரும்புவதை பிரதிபலிக்கிறது என்று டிபிஎஸ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

கடன் அட்டை நிலுவைத் தொகை, கொள்ளை நோய்க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் மொத்த கடன் அட்டை கட்டணத்தில் சிறிய பங்கை வகிக்கிறது என்றார் அவர்.

ஒசிபிசி வங்கியின் செய்தித் தொடர்பாளர், கடன் அட்டை தொடர்பான குற்ற விகிதம் நிலையானதாக உள்ளது என்றும் வேலையின்மை விகிதம் குறைவாக இருப்பது அதற்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையே சிங்கப்பூர்க் கடன்பற்று நிர்வாக அமைப்பின் (Credit Bureau Singapore) அறிக்கை மூலம் வெவ்வேறு வயதினரின் கடன் அட்டை பற்றிய கூடுதல் விவரம் தெரிய வந்துள்ளது.

2024ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 45 முதல் 49 வயதிற்குட்பட்ட பயனீட்டாளர்கள் அதிக அளவு பாதுகாப்பற்ற கடன் அட்டைக் கடனைக் கொண்டிருந்தனர்.

இந்தக் குழுவினர், சராசரியாக நிலுவையில் உள்ள செலுத்தப்படாத தொகை $6,670 ஆக இருந்தது.

நாற்பது முதல் 44 வயதுடைய பயனீட்டாளர்கள் சராசரியாக $6,542 நிலுவைத் தொகையைக் கொண்டிருந்தனர், அதே சமயம் 50 முதல் 54 வயதுடையவர்கள் சராசரியாக $6,304 செலுத்த வேண்டியவர்களாக இருந்தனர்.

குறிப்புச் சொற்கள்