தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் வருகிறார் ரொனால்டோ

1 mins read
4e627ac9-2d4b-42f2-9eb1-21bd301f5ec2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூன் 2, 3ஆம் தேதிகளில் சிங்கப்பூர் வருகிறார்.

ரொனால்டோ சிங்கப்பூர் செல்வந்தர் பீட்டர் லிம்மின் உபகாரச் சம்பளத் திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இங்கு வருகிறார்.

#BeSIUPER என்ற கருப்பொருள் மூலம் இளையர்கள் இடையே நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அதிகரிக்கும் விதமாக ரொனால்டோ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

சனிக்கிழமை ரொனால்டோ 1,000க்கும் அதிகமான இளையர்களை சந்திக்கவுள்ளார். சிலருடன் இணைந்து அவர் பேடல் பந்தும் விளையாடவுள்ளார்.

திரு பீட்டர் லிம், 2010ஆம் ஆண்டு முதல் அறநிறுவனங்களுடன் இணைந்து உபகாரச் சம்பளங்களை வழங்கி வருகிறார்.

ரொனால்டோவுடன் நெருக்கமாக உள்ளவர்களில் பீட்டர் லிம்மும் ஒருவர். அவர் ஸ்பெயினின் லா லீகா கிண்ணத்தில் விளையாடும் வெலன்சியா அணியின் உரிமையாளரும்கூட.

ஐந்து முறை சிறந்த காற்பந்து விளையாட்டாளர் என்று பேலண்டோர் விருதை வென்ற ரொனால்டோ தற்போது சவூதி அரேபியாவின் அல் நசர் அணிக்கு விளையாடிவருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் அவர் $270.4 மில்லியன் சம்பளத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்