ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையில், ஏறக்குறைய 120 அருகிவரும் ‘ஹாக்ஸ்பில்’ ஆமைக்குஞ்சுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய பூங்காக் கழகம் திங்கட்கிழமை காலை தெரிவித்தது.
பொதுமக்களில் ஒருவர் முதலில் ஆமைக்கூடு ஒன்றைக் கண்டதாகவும், தகவல் கிடைத்த பிறகு அதிகாரிகள் கடற்கரைக்குச் சென்று அதனைக் கண்டுபிடித்ததாகவும் கழகம் கூறியது.
உடும்புகள் போன்ற விலங்குகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்க, வலை ஒன்று போடப்பட்டு மறைக்கப்பட்டதாகவும் அது சொன்னது.
ஆமைக்குஞ்சுகளின் சுகாதார நிலையைத் தெரிந்துகொள்ள பூங்காக் கழக அதிகாரிகள் அவற்றை அளவெடுத்துக்கொண்டனர்.
சிங்கப்பூர் நீரில் காணப்படும் இரண்டு வகை கடல்சார் ஆமைகளில் ஒன்று ‘ஹாக்ஸ்பில்’ ஆமை. மற்றொன்று பச்சை ஆமை.
ஒவ்வோர் ஆண்டும் சில ‘ஹாக்ஸ்பில்’ ஆமைகள் முட்டையிடுவதற்காக சிங்கப்பூர் கரைகளுக்குத் திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டது.