பாண்டான் நீர்த்தேக்கத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) முதலை ஒன்று காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கு நீர் நடவடிக்கைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் அந்த முதலைக்கான தேடல் தொடர்கிறது.
வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பாண்டான் நீர்த்தேக்கத்தில் முதலை காணப்பட்டதாகப் பொதுப் பயனீட்டுக் கழகமும் தேசிய பூங்காக் கழகமும் கூட்டறிக்கை மூலம் தெரிவித்தன. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு அவை பதிலளித்தன.


