சிங்கப்பூர் சாலையில் முதலை

1 mins read
700d25e1-5187-40e0-92b9-6443b6308b33
ஃபேஸ்புக் பக்கத்தில் கூ என்ற இணையவாசி சாலையில் ஊர்ந்து செல்லும் முதலையின் இரண்டு படங்களைப் பதிவிட்டுள்ளார். - படம்: ஃபேஸ்புக்/ திரு கூ

செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) லிம் சூ காங் பகுதியில் உள்ள சாலை ஒன்றில் முதலை ஒன்று ஊர்ந்து செல்வதைக் காண முடிந்தது.

ஃபேஸ்புக் பக்கத்தில் கூ என்ற இணையவாசி சாலையில் ஊர்ந்து செல்லும் முதலையின் இரண்டு படங்களைப் பதிவிட்டார்.

மாலை 6.40 மணிவாக்கில் சிங்கப்பூர் இயற்கை ஆர்வலர்களின் Singapore Wildlife Sightings என்ற ஃபேஸ்புக் குழுவில் அதை அவர் பகிர்ந்தார்.

இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் திரு கூவிடம் பேசியது. பிற்பகல் 1 மணிவாக்கில் தாம் நியோ டியு கிரிசென்ட் சாலையில் செல்லும்போது முதலை ஊர்ந்து செல்வதைக் கண்டதாகத் தெரிவித்தார்.

நியோ டியு கிரிசென்ட் சாலை அருகே லாங் குவான் ஹங் முதலைப் பண்ணை உள்ளது.

முதலை சுங்கைப் பூலோ பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என தாம் நினைத்ததாக திரு கூ தெரிவித்தார்.

இதுகுறித்த மேல் விவரங்களை அறிய ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தேசியப் பூங்கா கழகத்திடமும், முதலைப் பண்ணையிடமும் தொடர்புகொண்டுள்ளது

குறிப்புச் சொற்கள்