அடுத்த ஆண்டுக்கான நிகர லாபம் குறையக்கூடும் என்று டிபிஎஸ் குழுமம் எதிர்பார்க்கிறது.
இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் அதன் நிகர லாபம் 2 விழுக்காடு சரிந்ததே இதற்குக் காரணம்.
இத்தகவலை டிபிஎஸ் வங்கி வியாழக்கிழமை (நவம்பர் 6) வெளியிட்டது.
சொத்துகள் அடிப்படையில் தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய வங்கியாக டிபிஎஸ் திகழ்கிறது.
இவ்வாண்டு ஜூலை மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தின் நிகர லாபம் $2.95ஆகப் பதிவானது.
ஓராண்டுக்கு முன்பு அது $3.03 பில்லியனாக இருந்தது.

