டிபிஎஸ்: முன்னுரைப்பை விஞ்சியது முதலாம் காலாண்டு லாபம்

டிபிஎஸ்: முன்னுரைப்பை விஞ்சியது முதலாம் காலாண்டு லாபம்

1 mins read
7ca7e359-02d6-443a-96bb-45d845071c16
டிபிஎஸ் வங்கி முதல் காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் மூன்று நிபுணர்களின் கணிப்பைக் காட்டிலும் அதிகம் என்று லண்டன் பங்குப் பரிவர்த்தனைக் குழுமம் (எல்எஸ்இஜி) தெரிவித்தது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் டிபிஎஸ் வங்கி $2.93 பில்லியன் நிகர லாபம் ஈட்டியுள்ளது. ஓராண்டுக்கு முன்னர் பதிவான $2.90 பில்லியன் லாபத்தைவிட இது அதிகம்.

முதல் காலாண்டின் நிகர லாபம் மூன்று நிபுணர்களின் கணிப்பைக் காட்டிலும் அதிகம் என்று லண்டன் பங்குப் பரிவர்த்தனைக் குழுமம் (எல்எஸ்இஜி) தெரிவித்தது. வங்கி ஈட்டக்கூடிய நிகர லாபம் $2.83 பில்லியனாக இருக்கும் என்று அவர்கள் முன்னுரைத்திருந்தனர்.

சொத்து நிர்வாகப் பிரிவு வலுவாக இருப்பதே அதற்கு முக்கியக் காரணம் என்று வங்கி கூறியது.

முதல் காலாண்டில் டிபிஎஸ் வங்கி நிகர லாபத்தில் 1 விழுக்காட்டு உயர்வைப் பதிவுசெய்ததை அடுத்து, இவ்வாண்டுக்கான கண்ணோட்டத்தில் பெரும்பாலும் மாற்றம் எதனையும் செய்யவில்லை.

அண்மை நிகர லாபத்தைத் தொடர்ந்து, டிபிஎஸ் குழுமம் தனது பங்குதாரர்களுக்கு இவ்வாண்டின் முதல் காலாண்டுக்கான ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 81 காசு வழங்கவிருக்கிறது.

ஓராண்டுக்கு முன்னர் வங்கி வழங்கிய ஈவுத்தொகையான ஒரு பங்கிற்கு 75 காசைக் காட்டிலும் இது அதிகம்.

அந்த ஈவுத்தொகையைப் பங்குதாரர்களுக்குத் தருவதன் மூலம் சிங்கப்பூரின் ஆகப் பெரிய வங்கியான டிபிஎஸ்ஸுக்குக் கிட்டத்தட்ட $2.3 பில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்