நேரலை விற்பனைத் திறனை வளர்க்க உள்ளூர் வணிகங்களுக்கு உதவும் டிபிஎஸ்

1 mins read
92be6181-4757-4605-be46-f40a6478f1e6
நேரலை வணிகச் சந்தை மூலம் இவ்வாண்டு $1.3 பில்லியன் டாலர் வரை உற்பத்தியாகும் என்று டிபிஎஸ் மதிப்பிடுகிறது.  - படம்: டிபிஎஸ்

சிங்கப்பூரில் நேரலை விற்பனையில் உள்ள திறனை வளர்த்துக்கொள்ள பயிரலங்குகள், நிகழ்ச்சிகள்மூலம் சிறிய, நடுத்தர வணிகங்களுக்கும் அக்கம்பக்கக் கடைகளுக்கும் டிபிஎஸ் நிறுவனம் உதவிவருகிறது.

சிங்கப்பூரில் நேரலைக் காணொளிகள் மூலம் பொருள்களின் விற்பனையை அடிப்படையாகக் கொண்ட நேரலை வர்த்தகச் சந்தை மூலம் இவ்வாண்டு $1.3 பில்லியன் டாலர் வரை உற்பத்தியாகும் என்று டிபிஎஸ் மதிப்பிடுகிறது.

“நேரலை விற்பனை ஆராய்ச்சி செய்யும் கட்டத்தில் இல்லை. அது அன்றாட இணைய வணிக அனுபவமாக மாறிவிட்டது. குறிப்பாகத் தொலைபேசிகளை அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மத்தியில்,” என்றார் டிபிஎஸ் தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் சச்சின் மிட்டல்.

அத்தகைய நேரலைகளில் வாடிக்கையாளர்கள் வணிகர்களுடன் அப்போதைக்கு அப்போதே உரையாடி அப்போதே திறன்பேசிகள் மூலம் பொருள்களை வாங்கிச் செல்லலாம்.

பொருள்கள் எப்படி வேலை செய்யும் என்பதையும் விற்பனையாளர்கள் நேரடியாகக் காட்டுவதுடன் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கும் அப்போதே பதில் சொல்ல முடியும்.

நேரலை வணிகப் போக்கை மூலதனமாகப் பயன்படுத்தி விற்பனைத் திறனை வளர்க்க உள்ளூர் வர்த்தகங்களுக்கு டிபிஎஸ் உதவ முற்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில் வங்கி நேரலை விற்பனைப் பயிலரங்குகளை சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு நடத்தியது.

டிக்டாக், பூம் மீடியா ஆகியவற்றுடன் இணைந்து இரண்டு சமூக வர்த்தகப் பயிலரங்குகளையும் வங்கி ஏற்பாடு செய்தது.

இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து 3ஆம் தேதி வரை டிபிஎஸ் நிறுவனம், டிக்டாக், சம்சுங் எலக்ட்ரோனிக்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து நடத்திய 60 மணி நேர நேரலையில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன.

குறிப்புச் சொற்கள்