7வது மாடியில் இருந்து விழுந்தார்: துரதிருஷ்ட சம்பவம் என தீர்ப்பு

1 mins read
3db70ba0-587d-4865-a90c-0d7119480c47
படம்: GOOGLE MAPS -

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள், ஓல்டு ஏர்போர்ட் ரோடு அருகே உள்ள ஜாலான் தீகா, புளோக் 47ன் ஏழாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் 2021ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி சோதனையிட்டனர்.

அப்போது, கோ சுவே டீ, 59, என்ற போதைப் புழங்கி, வீட்டின் சன்னல் வழியாக வெளியேறி கீழே விழுந்து இறந்துவிட்டார்.

அந்த மரணம் பற்றி விசாரணை நடத்திய மரண விசாரணை அதிகாரி, அந்த ஆடவர் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக கீழே விழுந்திருக்கிறார் என்பதற்குச் சாட்சியம் இல்லை என்று சென்ற மாதம் 31ஆம் தேதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.

அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க தனக்கு இருந்த ஒரே ஒரு வழியை அவர் பயன்படுத்தி இருக்கிறார். கோவின் மரணம் துரதிருஷ்டவசமான ஒரு சம்பவம் என்று அவர் தீர்ப்பில் கூறினார்.

அந்த ஆடவர், 1989 ஆம் ஆண்டுக்கும் 2005ஆம் ஆண்டுக்கும் இடையில் போதைப் புழக்கம், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களுக்காக பல முறை சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்பது ஆவணங்கள் மூலம் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்