தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெம்பனிஸ் விபத்தில் மோட்டார்சைக்கிள் சறுக்கி ஆடவர் மரணம்

1 mins read
e5101aa2-ba78-47d0-ac42-dfff69988d86
மோட்டார்சைக்கிளோட்டி தாமாகவே சறுக்கி விழுந்தார் என்று நம்பப்படுகிறது. - படம்: SG ROAD VIGILANTE/FACEBOOK

சாலையில் மோட்டார்சைக்கிள் சறுக்கியதில் அதை ஓட்டிய 54 வயது ஆடவர் உயிரிழந்துவிட்டார்.

விபத்து அக்டோபர் 26ஆம் தேதி தெம்பனிஸ் இன்டஸ்டிரியல் அவென்யூ 4ஐ நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் ரோடு பகுதியில் பகல் 3.50 மணியளவில் நடந்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

மோட்டார்சைக்கிள் சறுக்கத் தாமே காரணமாக இருந்த அந்த மோட்டார்சைக்கிளோட்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதை உதவி மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார்.

விபத்துக்குப் பின் எடுக்கப்பட்ட காணொளி ஒன்றில், சாலையின் வலத்தடத்துக்குப் பக்கத்தில் உள்ள புல்மீது நீலநிறக் கூடாரம் ஒன்றைக் காண முடிந்தது. கவிழ்ந்த மோட்டார்சைக்கிள் ஒன்றும் சில அடிதூரத்தில் கிடந்தது.

விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் நேர்ந்த உயிரிழப்புகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில், மோட்டார்சைக்கிளோட்டிகள், அவர்களோடு பயணம் செய்தவர்கள் ஆகியோரது எண்ணிக்கை பாதி என்றும் 68 பேர் இவ்வாறு உயிரிழந்தனர் என்றும் காவல்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

அத்துடன், 2023ல் சாலை விபத்துகளில் காயமுற்றோரின் எண்ணிக்க 4,290 ஆகும்.

குறிப்புச் சொற்கள்