டிபிஎஸ் லாபம் குறைந்ததால் பங்கு மதிப்பில் சரிவு

டிபிஎஸ் லாபம் குறைந்ததால் பங்கு மதிப்பில் சரிவு

1 mins read
5ee9eb7f-afcb-49f8-826b-d385e103b354
டிபிஎஸ் பங்கு மதிப்பு குறைந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய வங்கியான டிபிஎஸ் குழுமம், பங்குச் சந்தைக் கணிப்பாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. ஆண்டு அடிப்படையில் நான்காவது காலாண்டில் அதன் நிகர லாபம் பத்து விழுக்காடு குறைந்தது. குறைந்த வட்டி விகிதமும் வலுவான சிங்கப்பூர் நாணயமும் அதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

டிசம்பரில் முடிவடைந்த மூன்று மாத வருமானம், ஓராண்டுக்கு முன்பு இருந்த $2.52 பில்லியனிலிருந்து $2.26 பில்லியனுக்குக் குறைந்தது.

இதில் அவ்வங்கியின் சமூகப் பொறுப்புக்காக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் வெள்ளி சேர்க்கப்படவில்லை. இல்லையென்றால் நிகர லாபம் 2.36 பில்லியன் வெள்ளியாக இருந்திருக்கும்.

புளூம்பெர்க் ஆய்வில் நிகர லாபம் 2.59 பில்லியன் வெள்ளியாக இருக்கும் என்று சந்தைப் பகுப்பாய்வாளர்கள் கணித்திருந்தனர்.

டிபிஎஸ்ஸின் லாபம் குறைந்ததால் அதன் பங்குகளின் மதிப்பும் பிப்ரவரி 9ஆம் தேதி வர்த்தகம் ஆரம்பித்த நேரத்தில் 1.9 விழுக்காடு குறைந்து $58.18 ஆனது. அதே நாள் நடுப்பகுதியில் டிபிஎஸ் பங்கின் மதிப்பு 1.1 விழுக்காடு குறைந்து 58.63 வெள்ளிக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. ஜனவரி 29ஆம் தேதி அதன் பங்குகள் வர்த்தகத்தின் முடிவில் $59.79 வரை இருந்தது.

டிபிஎஸ்ஸின் போட்டி வங்கிகளான ஓசிபிசி பங்குகள் 0.7 விழுக்காடு கூடி 21.83 வெள்ளிக்கும் யுஓபி பங்குகள் 0.83% கூடி 38.82 வெள்ளியாகவும் அதிகரித்தது.

2026ஆம் ஆண்டில் டிபிஎஸ், 2025ஆம் ஆண்டைவிடச் சற்றுக் குறைவான நிகர லாபத்தை எதிர்பார்க்கிறது.

குறிப்புச் சொற்கள்