தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீபாவளி: பேருந்து, ரயில் சேவைகளின் நேரத்தை நீட்டிக்கும் எஸ்எம்ஆர்டி

2 mins read
51cde078-3301-4368-9c69-7c0a2eec63e9
அக்டோபர் 30ஆம் தேதி இரவு வடக்கு- தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்டப் பாதை, தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் பாதை ஆகிய வழிகளில் செல்லும் ரயில்களின் கடைசி பயண சேவை நேரம் மாற்றப்பட்டுள்ளது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தீபாவளியை முன்னிட்டு மேலும் சில பேருந்து, ரயில் சேவைகளின் இயக்க நேரம் அக்டோபர் 30ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தகவலை எஸ்எம்ஆர்டி நிறுவனம் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 17) அறிக்கை மூலம் வெளியிட்டது.

அக்டோபர் 30ஆம் தேதி இரவு வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்டப் பாதை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை ஆகிய வழிகளில் செல்லும் ரயில்களின் கடைசி பயண சேவை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

வடக்கு- தெற்கு, கிழக்கு-மேற்கு பாதைகளின் கடைசி ரயில் சேவை நள்ளிரவுக்கு பின் 12.30 மணிக்கு (அக்டோபர் 31) சிட்டி ஹாலில் இருந்து புறப்படும்.

வட்டப்பாதையில் ஹார்பர் ஃபிரண்ட் நிலையத்தில் இருந்து ரயில் 11.30 மணிக்கும் (அக்டோபர் 30), டோபி காட் நிலையத்தில் இருந்து 11.55 (அக்டோபர் 30) மணிக்கும் புறப்படும்.

தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்தில் இருந்தும் பேஷோர் நிலையத்தில் இருந்தும் கடைசி ரயில் சேவை நள்ளிரவுக்கு பின் 12.12 மணிக்கு (அக்டோபர் 31) புறப்படும்.

புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் பாதையிலும், தானா மேராவுக்கும் சாங்கி விமான நிலையத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் எப்போதும் போல் செயல்படும். அவற்றுக்கு நேரம் நீட்டிக்கப்படவில்லை.

எஸ்எம்ஆர்டியின் 18 பேருந்துகளின் சேவை நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

300, 301, 302, 307, 983A, 901, 911, 912A, 912B, 913, 920, 922, 973A, 181, 240, 241, 243G, 974A ஆகிய பேருந்துகளின் சேவை நேரம் அக்டோபர் 30ஆம் தேதி நள்ளிரவுக்கு பின்னும் இருக்கும்.

பேருந்து சேவை தொடர்பான தகவல்களை 1800-336-8900 என்ற எண்ணுக்கு அழைத்து கேட்கலாம் அல்லது www.smrt.com.sg இணையப்பக்கத்தை நாடலாம்.

தீபாவளிக்காக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனமும் வடகிழக்கு ரயில் பாதை, டௌண்டவுன் ரயில் பாதை ஆகிய வழிகளில் செல்லும் ரயில்களின் சேவை நேரத்தை நீட்டித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்