துணைப் பிரதமரைக் கொண்ட ‘டீப்ஃபேக்’ காணொளி

துணைப் பிரதமரைக் கொண்ட ‘டீப்ஃபேக்’ காணொளி

1 mins read
d72d513e-2b56-4635-925d-31d18388db5f
படம்: - தமிழ் முரசு
Google News Preferred Icon

சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கைக் கொண்ட ‘டீப்ஃபேக்’ காணொளி ஒன்று ஃபேஸ்புக்கிலும், இன்ஸ்டகிராமிலும் வலம்வருகிறது.

அந்தக் காணொளியில் முதலீட்டு மோசடியைத் தூண்டும் பொய்யான குரல் பதிவுக்கு ஏற்ப அவரது வாய் அசைவுகள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தக் குரல் பதிவு அவரது உண்மையான குரலெடுப்பையும் ஒலியழுத்தத்தையும் போலவே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. காணொளியின் வலது மேல் பக்கத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பதிவுசெய்த ஊடக நேர்காணல் ஒன்றில் துணைப் பிரதமர் வோங் இருப்பதைக் காட்டும் மாற்றி அமைக்கப்பட்ட படங்கள் காணொளியில் இடம்பெற்றுள்ளன.

அந்தக் காணொளியை நிறுவனமோ, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சோ தயாரிக்கப்படவில்லை என்றும் வெளியிடவில்லை என்றும் எஸ்பிஎச் மீடியா பேச்சாளர் ஒருவர் கூறினார்.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தெரியாத மூலங்களிலிருந்து வரும் காணொளிகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

தாம் பொருள்களை அங்கீகரிப்பதையும், அரசாங்கம் கொவிட்-19 அதிரடி நடவடிக்கையை நடைமுறைப்படுத்த திட்டமிடுவதாக தவறான தகவல்களைப் பரப்புவதையும் காட்டும் ‘டீப்ஃபேக்’ மோசடி தொடர்பான பதிவுகள், செய்திகள் குறித்து அறிந்திருப்பதாக திரு வோங் டிசம்பர் 11ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.

“அவை அனைத்தும் பொய்யானவை. அனைவரும் இணையத்தில் விழிப்புடனும் பகுத்தறிவுடனும் இருப்போம்,” என்றார் திரு வோங்.

குறிப்புச் சொற்கள்