தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீன அமைச்சருக்கு புத்தகங்களைபரிசளித்த துணைப் பிரதமர் ஹெங்

2 mins read
d6c177f9-22c7-45f0-b58a-2d89a8602442
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக விவகாரப் பிரிவின் அமைச்சர் லியூ ஜியான்சாவோவைச் சந்தித்த துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட். - படம்: எம்டிடிஐ

பெய்ஜிங்: நான்கு நாள் பயணம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் பெய்ஜிங்கில் புதன்கிழமையன்று சீன துணை அதிபர் ஹான் ஷெங்கைச் சந்தித்து (மார்ச் 26) பேசியுள்ளார்.

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே அரசதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 35வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் அது கடந்துவந்த பாதையை இரு தலைவர்களும் நினைவுகூர்ந்தனர்.

இது தவிர, அரசாங்கங்களுக்கு இடையிலான மூன்று திட்டங்களில் ஆக அண்மைய திட்டத்தின் 10வது ஆண்டு நிறைவையும் அவர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

‘சொங்சிங் கனக்டிவிட்டி’ எனும் முயற்சி, தென்-மேற்கு சீனாவின் நகராட்சிக்கு பெயரிடப்பட்டது.

“டியான்ஜின்னின் கடந்த 2023ம் ஆண்டு 15வது நிறைவு கொண்டாடியதையும் 2024ம் ஆண்டில் சூஷோவ்வின் 30வது ஆண்டு நிறைவையும் (தொழிற்பேட்டை) நினைவுகூர்ந்தோம்,” என்று துணைப் பிரதமர் ஹெங், டயாயூதாயில் உள்ள அரசாங்க விருந்தினர் மாளிகையில் நடந்த சந்திப்புக்கு முன்பு தெரிவித்தார்.

முன்னதாக, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக விவகாரப் பிரிவின் அமைச்சரான லியூ ஜியான்சாவோவை அவர் சந்தித்தார்.

மார்ச் 25ஆம் தேதி காலை உணவு விருந்தில் அவர்களது சந்திப்பு இடம்பெற்றது.

அப்போது சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே அரசதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு இவ்வாண்டு 35வது ஆண்டுக் கொண்டாட்டத்தை இருவரும் குறிப்பிட்டனர்.

இரு நாடுகளுக்கு இடையிலான உறவிலும் முக்கிய மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளது. 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சோங்சிங் தொடர்பு முயற்சியும் அவற்றில் ஒன்று.

பரஸ்பர புரிந்துணர்வு மேம்பட உதவிய இரு நாட்டின் மக்களுக்கும் கட்சிகளுக்கும் இடையிலான வலுவானத் தொடர்பையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அது மட்டுமல்லாமல் வட்டார, அனைத்துலக மேம்பாடு தொடர்பான கருத்துகளையும் தலைவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

மார்ச் 25ஆம் தேதி ஃபேஸ்புக்கில் திரு ஹெங் வெளியிட்ட பதிவில் சீன அமைச்சர் அவரை வரவேற்கும் படத்தைக் காண முடிந்தது.

திரு ஹெங்கைச் சந்தித்த சீனப் பேராளர்கள் குழுவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக விவகாரப் பிரிவின் துணை அமைச்சர் சன் ஹாயானும் இடம் பெற்று இருந்தார்.

துணைப் பிரதமர் ஹெங், திரு லியூவுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் இயூவை தொடர்பு கொண்டவர்களின் நேர்காணல்கள் அடங்கிய 2016ஆம் ஆண்டில் தலைப்பிடப்பட்ட ‘அப் குளோஸ் வித் லீ குவான் இயூ’ புத்தகமும் அவற்றில் ஒன்று.

“நாங்களும் இதே போன்ற புத்தகங்களையே படிக்கிறோம்,” என்று புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட திரு லியூ சொன்னார்.

திரு ஹெங், பீகிங் யூனியன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் செல்லவிருப்பதாக தமது பதிவில் தெரிவித்திருந்தார்.

திரு லியூவின் அமைச்சு, வெளிநாட்டுக் கட்சிகளுடன் உறவை வளர்க்கும் பராமரிக்கும் பணிகளைச் செய்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்