அதிகம் முதலீடு செய்ய விருப்பம்; நிதிச் சுமையால் இடையூறு

அதிகம் முதலீடு செய்ய விருப்பம்; நிதிச் சுமையால் இடையூறு

சிங்கப்பூரர்களின் விருப்பத்துக்கு வாழ்க்கையின் நிதிச் சவால்கள் இடையூறாக இருப்பது கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது
சித்திரிப்பு: இன்வெஸ்டோபீடியா

11 Nov 2026 - 10:04 am

1 mins read

ஹாங்காங், ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் இருப்பவர்களுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரர்கள் தங்களின் முதல் முழுநேர வேலையில் அமர்ந்த பிறகு கூடுதலாக முதலீடு செய்யும் வாய்ப்புகள் அதிகம்.

எனினும், முக்கிய வாழ்க்கைச் செலவுகளால் அவர்களின் போக்கில் மாற்றம் ஏற்படக்கூடும் என்பது தெரியவந்துள்ளது. முதல் வீடு வாங்குவது போன்ற சுமைகளால் அவர்கள் முதலீடு செய்வதற்குப் பதிலாக நிதிப் பாதுகாப்பில் கவனம் செலுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைஃப் எனும் மின்னிலக்கச் சொத்து நிர்வாகத் தளத்தின் கோரிக்கையில் யூகவ் நடத்திய கருத்தாய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்