தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வார நாள்களில் கூசு தீவுக்குச் செல்ல ஆலோசனை

1 mins read
71937e7a-ad5a-4973-bc16-bf0c3b8e9360
கூசு தீவுவில் துவா பே கோங் சீனக் கோயில் உள்ளது. அங்கு நடைபெறும் வருடாந்தர யாத்திரைக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்கிறார்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்வரும் புனித யாத்திரை காலத்தில் கூசு தீவுக்குச் செல்ல விரும்புவோர் வார நாள்களில் அங்கு செல்லுமாறு சிங்கப்பூர் நில ஆணையம் ஆலோசனை கூறியுள்ளது.

அக்டோபர் 21ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதிவரை உள்ள வாரயிறுதிகளில் அங்கு பெருந்திரளாக வருகையாளர்கள் கூடுவர் என்பதே அதற்குக் காரணம் என்று ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்தீவில் 1923ல் கட்டப்பட்டுள்ள துவா பே கோங் சீனக் கோயிலில் நடைபெறும் வருடாந்தர யாத்திரைக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்கிறார்கள். அத்தீவில் மூன்று மலாய் வழிபாட்டுத் தலங்களும் உள்ளன.

கூசு தீவில் இரவைக் கழிக்க வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை. வருகையாளர்கள் தங்களது தண்ணீர் போத்தல்களை கொண்டு செல்ல வேண்டும்.

கூசு தீவுக்குச் செல்ல விரும்புவோர் www.islandcruise.com.sg என்ற இணையத் தளத்தில் படகு நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம் அல்லது படகு புறப்படும் மரினா சவுத் பியரில் உள்ள முகப்பில் வாங்கலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்