சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக தினேஷ் சிங் திலோன் நியமனம்

சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக தினேஷ் சிங் திலோன் நியமனம்

1 mins read
d4e8cdf7-8c73-4a01-8692-f09b1239ef77
திரு தினேஷ் சிங் திலோன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக திரு தினேஷ் சிங் திலோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டிலிருந்து சங்கத்தின் தலைவராக இருந்து வந்த திருவாட்டி லீசா சேம் ஹுயி மின்னுக்குப் பதிலாகத் திரு திலோன் தலைவர் பொறுப்பேற்கிறார்.

2026ஆம் ஆண்டுக்கான 21 புதிய நிர்வாகிகளைச் சங்கம் நியமித்துள்ளது.

துணைத் தலைவர்களாகப் பேராசிரியர் டான் செங் ஹானும் திரு டேனியல் கோ சூன் குவானும் பதவி வகிப்பர்.

பொருளாளராகத் திருவாட்டி பெக்கி சேரா யீ மே குவேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எலன் அண்ட் கிலெட்ஹில் அனைத்துலக சமரசத்துவத்தின் துணைத் தலைவராக திரு தினேஷ் பதவி வகிப்பதாக அந்நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
வழக்கறிஞர்தலைவர்பதவியேற்பு