வாக்குவாதம் ஏற்பட்டதில் மனைவியைமனைவியை மூன்று முறை கடுமையாகத் தாக்கினார் திரு அவு யோங் கின் முன்.
தனது மனைவியுடன் தங்கள் இரட்டைப் பிள்ளைகளை சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள பாலர் பள்ளிக்கு அனுப்பிவிட்டு திரு ஆவ் யோங் கின் முன் அங்கு உள்ள உணவகத்தில் சாப்பிடச் சென்றார்.
உரையாடலின்போது தன் வீட்டை விற்ற பணத்தில் ஒரு தொகையைத் தனது கடன் பற்று அட்டை பாக்கியைச் செலுத்த பயன்படுத்தப் போவதாக ஆடவர் கூறியுள்ளார். அதனை ஏற்றுக்கொள்ளாமல் புதிதாக வீடமைப்பு வளர்ச்சி கழகத்தில் வீடு வாங்க கேட்ட மனைவியை அறைய முயன்றார். பின்னர், தொடர்ந்து தன் மனைவியைக் கடுமையாகத் தாக்கியதில் அவருக்குத் தலையிலும் முதுகிலும் பலத்தக் காயங்கள் ஏற்பட்டன.
அவர் வலி தாங்கமுடியாமல் தரையில் விழுந்ததும் திரு அவு யோங் கின் முன் தொடர்ந்து அவருடன் வாக்குவாதம் மேற்கொண்டார். சுற்றியிருந்தவர்கள் அவரது மனைவி எழுந்து நிற்க உதவினர்.
அவரது மனைவி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் முழுமையாகக் குணமடைய ஓராண்டு ஆகக்கூடும் என்று தெரியவந்தது.
திரு அவு யோங் கின் முனின் செயல்கள் கண்காணிப்புக் கருவியில் பதிவானது. தாக்குதலின் முறையை முக்கியக் காரணமாகக் கொண்டு வழக்கறிஞர் 24 முதல் 26 மாதங்கள்வரை சிறைத்தண்டனையும் 6 பிரம்படிகளும் கோரினார்.
“ஆவ் யோங்கின் மூன்று தாக்குதல்களும் மூர்க்கத்தனமாக அதிகரித்தன,” என அரசுத்தரப்பு நீதிமன்றத்தில் கூறியது.
ஆவ் யோங்கை திரு ரபேல் லூயிஸ் பிரதிநிதித்தார், அவர் தனது கட்சிக்காரர் விவாகரத்து நடவடிக்கைகளை எதிர்கொண்டதாக நீதிமன்றத்தில் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தண்டனை விதிப்பு நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
வேண்டுமென்றே கடுமையான காயத்தை ஏற்படுத்தியவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்படலாம்.