தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரிவினைக் கருத்துகள் ஒற்றுமையை பாதிக்க விடக்கூடாது: ஃபை‌ஷால்

2 mins read
bf241acf-a72f-47f1-8036-d80a51087879
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபை‌ஷால் இப்ராஹிம். - படம்: இபிஏ

பல மனிதாபிமானப் பேரிடர்கள் தலைதூக்கியபோது சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் அமைதி காத்ததாக ஃபேஸ்புக் பயனர் ஒருவர் கருத்துரைத்தது குறித்து முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபை‌ஷால் இப்ராஹிம் மிகுந்த கவலை தெரிவித்துள்ளார்.

அதுபோன்ற பிரிவினைக் கருத்துகள், சிங்கப்பூரில் கட்டிக்காக்கப்பட்டுவரும் பல தரப்பினரிடையே நிலவும் மரியாதையையும் ஒற்றுமையையும் அழிக்கவிடக்கூடாது என்றும் திரு ஃபை‌ஷால் எடுத்துரைத்தார்.

“அமைதி காத்தல் அனைத்துலக மனிதாபிமான சட்டங்கள் மீறப்படுவதற்கு எதிராக நாம் குரல் கொடுக்காமல் இருப்பதாகிவிடும், அது, மற்ற பகுதிகளிலும் வன்முறையால் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் நடவடிக்கைகளுக்கு வழிவிடும். நமது உலகம் மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும், மனிதாபிமானத்தை நிலைநாட்டுங்கள்,” என்று திருவாட்டி ஹலிமா பதிவிட்டிருந்தார்.

திருவாட்டி ஹலிமா, காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரிடர் தொடர்பில் அமைதி காப்பது மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுக்காமல் இருப்பதாகும் என்று கடந்த வெள்ளிக்கிழமை (மே 23) ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். அதற்குப் பதிலளித்த கிரிட்டிக்கல் ஸ்பெக்டேட்டர் (Critical Spectator) எனும் ஃபேஸ்புக் பக்கம், பல மனிதாபிமானப் பேரிடர்களின்போது திருவாட்டி ஹலிமா அமைதி காத்தார் என்று பதிவிட்டிருந்தார்.

“காஸாவில் நடக்கும் விதிமீறல்கள் தொடர்பில் அமைதி காப்பது நாம் குரல் கொடுக்காததற்கு சமம் என்றால் அது, மற்ற நெருக்கடிகளுக்கும் அவ்வாறு நடந்துகொள்வதற்கு சமமாகும்,” என்று கிரிட்டிக்கல் ஸ்பெக்டேட்டர் பதில் பதிவிட்டார். சுடான், லிபியா, ஏமன், மியன்மார் உள்ளிட்ட நாடுகள் எதிர்கொண்டுவரும் நிலைமையை அவர் எடுத்துக்காட்டுகளாகச் சொன்னார்.

கிரிட்டிக்கல் ஸ்பெக்டேட்டர், போலந்தைச் சேர்ந்த மைக்கல் பெட்ரேயுஸ் என்பவரால் நடத்தப்படும் ஃபேஸுபுக் பக்கம். அவரின் ஃபேஸ்புக் பதிவுக்கு எதிராக துணைப் பேராசிரியர் ஃபை‌ஷால் இப்ராஹிம் கண்டனம் தெரிவித்தார்.

மற்ற பகுதிளில் தொடரும் அவலநிலைக்குக் கவனம் தரும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிட்ட திரு ஃபை‌ஷால், பாலஸ்தீனர்கள் அவதிப்படுவதை சிறுமைப்படுத்தும் கருத்துகள் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

சிங்கப்பூரர்கள் பலரைப் போல் தாமும் மிகுந்த துயரத்துடன் காஸாவில் தொடரும் நிகழ்வுகளைக் கவனித்து வருவதாக திரு ஃபை‌ஷால் வெள்ளிக்கிழமை ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்