‘செட்டியா ஹெர்பா’ ஊட்டமருந்தைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை

1 mins read
a94a3577-97e9-45bf-9caf-0fd9deaf7f0f
‘செட்டியா ஹெர்பா’ ஊட்டமருந்து. - படம்: சுகாதார அறிவியல் ஆணையம்

‘செட்டியா ஹெர்பா’ எனும் ஊட்டமருந்தை வாங்கவோ உட்கொள்ளவோ வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டார்.

மூட்டுவலி, மூட்டுவீக்கம் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுதரும் ஊட்டமருந்தாக விளம்பரப்படுத்தப்படும் ‘செட்டியா ஹெர்பா’வில் ஆற்றல்மிக்க டெக்சாமெத்தசோன், பிரெட்னிசிலோன் ஊக்கமருந்து (ஸ்டீராய்ட்) வகைகளும் வலிநீக்கி மருந்தான டைக்லோஃபினாக் மருந்தும் இருப்பதாக சுகாதார அறிவியல் ஆணையம் புதன்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்தது. அந்த மருந்து வகைகளை மருத்துவக் கண்காணிப்பில் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று ஆணையம் குறிப்பிட்டது.

கண்காணிப்பின்றி ஊக்கமருந்து வகைகளை நீண்டகாலத்துக்கு உட்கொள்வது நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு வித்திடக்கூடும். அதேபோல், சரியான மருத்துவக் கண்காணிப்பின்றி ஊக்கமருந்து வகைகளை ஒருவர் உட்கொள்வதை நிறுத்தினாலும் அவரின் உடலுக்குப் பாதிப்பு ஏற்படலாம்; உடற்சோர்வு, குறைவான ரத்த அழுத்தம், தசை மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சினைகளுக்கும் ஆளாகலாம் என்று ஆணையம் சுட்டியது.

குறிப்புச் சொற்கள்