தம் பெயரில் வரும் போலியான மின்னஞ்சலை நம்ப வேண்டாம்: துணைப் பிரதமர் ஹெங்

தம் பெயரில் வரும் போலியான மின்னஞ்சலை நம்ப வேண்டாம்: துணைப் பிரதமர் ஹெங்

1 mins read
d7396929-a763-47a3-a6e3-c02525b05ad2
பொதுமக்கள் மின்னஞ்சல் மோசடியில் சிக்க வேண்டாம் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கேட்டுக்கொண்டார். - படம்: ஹெங் சுவீ கியட்/ சமூக ஊடகம்

தம் பெயரில் வரும் போலியான மின்னஞ்சலை நம்ப வேண்டாம் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கேட்டுக்கொண்டார்.

அது ஒரு மோசடி மின்னஞ்சல் என்று அவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

இது குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு ஹெங் தகவல் வெளியிட்டார்.

giftbox291@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து “RECOGNIZING EXCELLENCE - Swift Reaction!!” என்னும் தலைப்பைக் கொண்டு தம் பெயரில் வரும் மின்னஞ்சலை நம்ப வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் அந்த மோசடியில் சிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

கடந்த சில மாதங்களாகவே சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள் போல சமூக ஊடகத்தில் கணக்குகளைத் தொடங்கி மோசடிக்காரர்கள் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் முதலீடு தொடர்பாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் பேசுவது போலுள்ள ‘டீப் ஃபேக்’ என்னும் போலி காணொளி இணையத்தில் வலம் வந்தது. அது குறித்து திரு லீ பொதுமக்களை எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்