பருவநிலை மாற்றத்திற்கு ஏற்பத் திட்டங்களை வகுக்கும் டிபிஎஸ்

பருவநிலை மாற்றத்திற்கு ஏற்பத் திட்டங்களை வகுக்கும் டிபிஎஸ்

2 mins read
பருவநிலைக்கு ஏற்ப செயல்படுவது (climate adaptation) என்பது பொதுமக்கள்மீது பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைக் குறிக்கிறது.
132eb88e-d787-4e83-adb5-17f53fd6ebd3
டிபிஎஸ் வங்கியின் தலைமை நிலைத்தன்மை அதிகாரி ஹெல்ஜ் முன்கெல். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய வங்கியாக டிபிஎஸ் (DBS) திகழ்கிறது. தற்போது அது பருவநிலை மாற்றத்திற்கு ஏற்பத் திட்டங்களை (climate adaptation) வகுத்து வருகிறது.

“பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப செயல்படுவதைத் தனது முக்கிய உத்திசார் முன்னுரிமையாகக் கொண்டுள்ளது டிபிஎஸ்,” என்று வங்கியின் தலைமை நிலைத்தன்மை அதிகாரி ஹெல்ஜ் முன்கெல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் வியாழக்கிழமை (மார்ச் 12) தெரிவித்தார்.

பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளிலிருந்து மக்களையும் இடங்களையும் பாதுகாக்கும் திட்டங்களை உருவாக்குவதற்கு, எவ்வாறு நிதித் தீர்வுகளை வடிவமைக்கலாம் என்பதைப் பற்றி வங்கி ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க எவ்வாறு நிதியளிக்கலாம் என்பதை ஆராய, அனைத்துலகக் குழு ஒன்றுடனான கூட்டமைப்பை வங்கி விரைவில் அறிவிக்கும் என்று திரு. முன்கெல் தெரிவித்தார். இது குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் நிறுவனங்களுக்கு நிலைத்தன்மை சார்ந்த கடன்கள், பசுமைப் பத்திரங்கள் போன்ற கடன் திட்டங்களை மேம்படுத்தலாம் என்றும் திரு. முன்கெல் குறிப்பிட்டார்.

2026ஆம் ஆண்டில் நாட்டின் முன்னுரிமை வழங்கப்படும் பட்டியலில் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப செயல்படுவதும் உள்ளது என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு மார்ச் 3ஆம் தேதி தெரிவித்திருந்தது.

அமைச்சின் அறிவிப்பு வெளியாகிய ஒரு வாரத்தில் டிபிஎஸ் வங்கி தனது நிலைப்பாடு குறித்துப் பேசியுள்ளது.

பருவநிலைக்கு ஏற்ப செயல்படுவது (climate adaptation) என்பது பொதுமக்கள்மீது பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைக் குறிக்கிறது.

கடல் மட்டம் உயர்வதிலிருந்து நிலத்தைப் பாதுகாக்கக் கடலோரங்களில் பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல், கடுமையான வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பது ஆகியவை இதில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்