தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீடித்த நிலைத்தன்மை விருதுகளுக்குத் தலைமை நடுவர் டாக்டர் ஏமி கோர்

1 mins read
8e9e1585-ccc8-4ed5-a5ce-7cac23a9a3e0
பொறுப்பான வளர்ச்சியைத் தூண்டுவதுடன் பசுமை நிதியிலும் நீடித்த நிலைத்தன்மையிலும் உள்ள சிங்கப்பூரின் பங்கை விருதுகள் உறுதிப்படுத்தும் என்று டாக்டர் ஏமி கோர் நம்புகிறார். - படம்: சாவ்பாவ்

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஏமி கோர், நீடித்த நிலைத்தன்மை விருதுகளுக்கான புதிய தலைமை நடுவராகப் பொறுப்பேற்கிறார்.

பிசினஸ் டைம்ஸ் நாளேடு, யுஓபி வங்கி ஆகியவை மூன்றாவது முறையாக இணைந்து வழங்கும் விருதுகள் சிங்கப்பூரின் சமூக, சுற்றுப்புறத்தின் நீடித்த நிலைத்தன்மைக்கு நன்மையளிக்கும் வகையில் பங்களித்த தனிநபர்களையும் வர்த்தகங்களையும் சிறப்பிக்கிறது.

“நீடித்த நிலைத்தன்மை என்பது புறத்தில் உள்ள விவகாரம் அல்ல. அது நீண்டகால பொருளியல் மீள்திறனுக்கும் சமூக நலனுக்குமான நடுகல்,” என்று டாக்டர் கோர் விவரித்தார்.

அண்மைய புவிசார் அரசியல் பதற்றங்களும் நிச்சயமற்ற பொருளியல் சூழல்களும் நீடித்த நிலைத்தன்மை நடவடிக்கைகளில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

“இந்த நீடித்த நிலைத்தன்மை விருதுகள் தனிநபர்கள், வணிகங்களின் அயராத உழைப்பைப் பறைசாற்றுகிறது,” என்று டாக்டர் கோர் குறிப்பிட்டார்.

பொறுப்புமிக்க வளர்ச்சியை நோக்கி வர்த்தகங்களை வழிநடத்தவும் பசுமை நிதியில் சிங்கப்பூரின் பங்கை வலியுறுத்தவும் விருது ஓர் உந்துதலாக இருக்கும் என்றும் டாக்டர் கோர் வலியுறுத்தினார்.

நீடித்த நிலைத்தன்மை விருதுகளில் மூன்று பிரிவுகள் உண்டு. பெரிய நிறுவனங்கள், சிறிய, நடுத்தர நிறுவனங்கள், தனிநபர்கள் என ஒவ்வொரு பிரிவின் ஏதாகிலும் ஒரு விருதை வெல்வதற்கான வாய்ப்பைத் தேர்வுபெறுவோர் பெறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்