தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துவாஸ் கடற்பகுதியில் மூழ்கிய தூர்வாரிக் கப்பல்

1 mins read
e7c2087a-0c24-497a-9cce-4bd48991ca82
தூர்வாரிக் கப்பல் மூழ்கியதால் துறைமுகச் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அதே நேரத்தில் அவ்வழியே செல்லும் கப்பல்கள் அப்பகுதியைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன என்றும் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது. - படம்: எஸ்பிஎச் மீடியா

துவாஸ் கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த தூர்வாரிக் கப்பல் (dredger) நீரில் மூழ்கியது குறித்துச் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

கடற்பகுதியின் அடியிலிருந்து பொருள்களை அகற்றி, வேறிடத்தில் வைப்பதற்கு தூர்வாரிக் கப்பல் உதவுகிறது.

அக்கப்பல் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) கடலில் மூழ்கியது குறித்து பிற்பகல் 1.30 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக ஆணையம் தெரிவித்தது.

அதனையடுத்து, ஆணையத்தின் மூன்று சுற்றுக்காவல் கலங்கள் உதவிக்காக அவ்விடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

மத்திய அமெரிக்க நாடான பெலிசில் பதிவுசெய்யப்பட்டது கேஎஸ்இ ஹிட்டாச்சி என்ற அந்தத் தூர்வாரிக் கப்பல். சம்பவம் நேர்ந்தபோது அக்கப்பலில் ஒருவரும் இல்லை என்று ஆணையம் குறிப்பிட்டது.

இதன் காரணமாகத் துறைமுகச் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அதே நேரத்தில் அவ்வழியே செல்லும் கப்பல்கள் அப்பகுதியைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன என்றும் ஆணையம் விளக்கியுள்ளது.

கடலில் மூழ்கிய அந்தத் தூர்வாரிக் கப்பலை மீட்க அதன் உரிமையாளரும் ஏற்பாடுகளைச் செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்