மது அருந்தி காரை ஓட்டி சன்டெக் நீரூற்றில் விழுந்த ஓட்டுநருக்குச் சிறை

மது அருந்தி காரை ஓட்டி சன்டெக் நீரூற்றில் விழுந்த ஓட்டுநருக்குச் சிறை

1 mins read
d18fc2ae-5501-4a5a-8f9b-7b1909d6fa36
சமூக ஊடகங்களில் வெளிவந்த புகைப்படங்களில் கவிழ்ந்த நிலையில் கார். - படம்: சாவ்பாவ், ஷின்மின் சீன நாளிதழ்கள்

ஒரு லிட்டர் அளவுக்கு மேல் பீர் எனப்படும் மதுபானத்தை அருந்திய ஆடவர் ஓட்டிய கார் சாலையில் இருந்த பாதுகாப்புத் தடைகளையும் கடந்து, சன்டென் சிட்டியின் புகழ்பெற்ற நீரூற்றில் தலைகீழாய் கவிழ்ந்தது.

தலையிலும் மற்ற உடல் பகுதிகளிலும் அவருக்குக் காயங்கள் ஏற்பட்டதால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அன்றைய தினம் அவரது ரத்தமும் மூச்சுக் காற்றும் மதுபானத்தின் அளவைக் கண்டறிய காவல்துறையால் சோதனைக்கு எடுக்கப்படவில்லை.

சம்பவம் 2024ஆம் ஆண்டு ஜூலை 13 அன்று நள்ளிரவுக்கு மேல் நடந்தது. விசாரணையில் அவர் தூக்க மாத்திரைகளை மது உட்கொள்வதற்கு முன்பாக எடுத்துக்கொண்டதாக மனநலக் கழகத்திடம் கூறியிருந்தார்.

அவரது குற்றத்துக்கு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) ஐந்து வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தென் சிங் சொங் என்ற 58 வயது ஆடவர் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சிறையில் இருந்து விடுதலை ஆனதும் அவர் எவ்வித வாகனங்களையும் ஓட்டுவதற்கும் ஓட்டுவதற்கான உரிமங்கள் பெறுவதற்கும் இரண்டரை ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

அவர் ஏற்படுத்திய விபத்தால் நீரூற்றுக்கு சேதம் ஏற்பட்டது. அதனை ஈடுகட்ட அவர் $64,600 தொகையை சன்டெக் சிட்டி நிர்வாகத்திடம் முழுமையாகச் செலுத்திவிட்டார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்