லிட்டில் இந்தியாவில் பல வாகனங்களை மோதிவிட்டு தப்பியோடிய ஓட்டுநர்

லிட்டில் இந்தியாவில் பல வாகனங்களை மோதிவிட்டு தப்பியோடிய ஓட்டுநர்

படம்:ஷிமின் சீன நாளிதழ்

05 Nov 2026 - 8:04 pm

1 mins read

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் புதன்கிழமை (நவம்பர் 4) மாலை வேளையில் ஒரு கார் சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல வாகனங்களை மோதியது.

சையது ஆல்வி ரோட்டில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார்.

நான்கு கார்களும் ஒரு லாரியும் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து அன்றையதினம் மாலை 6.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது. அதன் விசாரணையில் 24 வயது ஆடவர் உதவி வருவதாகவும் அது தெரிவித்தது.

ஒரு விபத்தில் வாகனத்தையோ பாதசாரியையோ மோதிவிட்டுத் தப்பிச்செல்லும் குற்றம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இதன் விசாரணையில் உதவிவரும் ஆடவர் மோதிய காரின் ஓட்டுநர் என்று காவல்துறை உறுதிப்படுத்தியது.

யாருக்கும் இச்சம்பவத்தில் காயம் ஏற்படவில்லை.

ஷின்மின் சீன நாளிதழிடம் விவரங்களைப் பகிர்ந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டப் பல வாகனங்களை மோதிவிட்டு அந்தக் கார் ஓட்டுநர் அதிலிருந்து வெளியேறி தப்பிவிட்டார் என்று தெரிவித்தார்.

விசாரணை தொடர்கிறது. மேலும் விவரங்களை அறிய காவல்துறையை ஸ்ரெட்ய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.

பல கீரல்களுடன் முன் சக்கரங்களில் ஒன்றை இழந்ததோடு முன்புற விளக்குகள் உடைந்த நிலையில் வாகனங்களை மோதிய கார் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதை புகைப்படங்கள் காட்டின.

மோதப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், அருகில் கடைத்தெருவிலோ அல்லது வேலையிடங்களிலோ இருந்துள்ளனர். கார் மோதியபோது எவரும் அவர்களது வாகனங்களில் இல்லை.

குறிப்புச் சொற்கள்