நீடித்த அதிகாரப் பத்திரம்: முறைகேடுகள் குறைவு, ஆனால் குடும்பச் சிக்கல்கள் அதிகம்

நீடித்த அதிகாரப் பத்திரம்: முறைகேடுகள் குறைவு, ஆனால் குடும்பச் சிக்கல்கள் அதிகம்

2 mins read
d2d18909-e872-422e-af27-7f383111cc6f
2025ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் வழங்கப்பட்ட சுமார் 405,000 நீண்டகால அதிகாரப் பத்திரங்களில்  தவறு நிகழ்ந்துள்ளதாகப் பொதுக் காப்பாளர் அலுவலகத்திற்கு ஏறத்தாழ 40 புகார்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் நீண்டகால அதிகாரப் பத்திரத்தை (எல்பிஏ) தவறாகப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, அவை குடும்பங்களுக்குள் இருக்கும் பெரிய சிக்கல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

2025ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் வழங்கப்பட்ட சுமார் 405,000 பத்திரங்களில்  அதற்கான  அதிகாரம் பெற்றவர்கள்  ஏதோ தவறு செய்ததாக பொதுக் காப்பாளர் அலுவலகத்திற்கு ஏறத்தாழ 40 புகார்கள் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய முறைகேடுகள் என்பது, தனிப்பட்ட நலன், சொத்து அல்லது நிதி விவகாரங்கள் போன்ற விஷயங்களில், உதவி பெறுபவர்கள், உதவி வழங்குபவரின் நலனுக்கு உகந்த வகையில் திகழாத சூழ்நிலைகளைக் குறிக்கும். அவ்வகையில் இச்செயல் முறையற்ற கவனிப்பு குறித்த குற்றச்சாட்டுகள் முதல் மோசடி அல்லது நிதி முறைகேடு வரை இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.

வழக்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், வெளிப்படையான தகவல் பரிமாற்றம், முன்கூட்டியே வகுக்கப்படும் தெளிவான, விரிவான வழிகாட்டுதல்கள் மூலம் இது சார்ந்த சச்சரவுகளைப் பெரும்பாலும் தடுக்க முடியும் என்றும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

ஒரு தனிநபர்  தனது மனத்திறனை இழக்கும் பட்சத்தில், தனிப்பட்ட நலன், சொத்து, நிதி போன்ற பிற விஷயங்களில் தம் சார்பாக பொறுப்பேற்க, நம்பகமான ஒருவரை, பொதுவாக ஒரு குடும்ப உறுப்பினரை  நியமிக்க ‘எல்பிஏ’ அனுமதிக்கிறது .

இது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் புள்ளிவிவரங்களை வழங்கிய சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சு , கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்துக்கும் குறைவான ‘எல்பிஏ’-க்கள் இடைநிறுத்தப்பட்டதாகவோ அல்லது ரத்து செய்யப்பட்டதாகவோ தெரிவித்துள்ளது .

குறிப்புச் சொற்கள்