சிங்கப்பூர் கடைகளில் இனி இந்தோனீசிய முட்டைகள் கிடைக்கும்.
இந்தோனீசியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய சிங்கப்பூர் உணவு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் சிங்கப்பூருக்கு முட்டைகள் வழங்கும் பட்டியலில் 18ஆவது நாடாக இணைந்தது இந்தோனீசியா.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அப்பட்டியலில் புருணை சேர்க்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு அப்பட்டியலில் 12 நாடுகள் மட்டுமே இருந்தன.
சிங்கப்பூருக்கு தேவையான முட்டைகளில் மூன்றில் இரண்டு பங்கு இறக்குமதி செய்யப்படுபவை. மீதமுள்ளவை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுபவை.
சிங்கப்பூருக்கு வரும் பெரும்பாலான முட்டைகள் மலேசியாவில் இருந்து வருபவை. தாய்லாந்து, ஆஸ்திரேலியா, போலந்து, நியூசிலாந்து, உக்ரைன், தென் கொரியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்தும் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.


