மோட்டார் சைக்கிள்மீது ‘முட்டை வீச்சு’; விசாரணை தொடர்கிறது

மோட்டார் சைக்கிள்மீது ‘முட்டை வீச்சு’; விசாரணை தொடர்கிறது

1 mins read
df920dfb-f138-4c86-a092-80999b980cf4
முட்டை வீச்சுக்கு உள்ளானதாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள். - படங்கள்: sgfollowsall / இன்ஸ்டகிராம்

ஈசூனில் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிள் நாசவேலைக்கு உள்ளானதாக நம்பப்படுகிறது.

அந்த மோட்டார் சைக்கிள்மீது உடைந்த பச்சை முட்டைகள் வீசப்பட்டதைப் போல் காட்டும் காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டன. அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

சம்பவம் பதிவான காணொளிகள்

சம்பவம் பதிவான காணொளிகள் இம்மாதம் எட்டாம் தேதி சமூக ஊடகத் தளங்களில் பலரால் பகிரப்பட்டன. சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள்மீது முட்டைகள், முட்டை ஓடுகள், அடையாளம் தெரியாத திரவம் போன்றவை சிதறிக்கிடந்தது அந்தக் காணொளிகளில் காணப்பட்டன.

எக்சோஸ்ட் பைப் எனப்படும் மோட்டார் சைக்கிளிலிருந்து இயந்திரக் காற்றை வெளியேற்றும் குழாயினுள்ளும் உடைந்த முட்டைகளின் மிச்சம் அடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

காவல்துறை விசாரணை

இதுகுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்கு திங்கட்கிழமை (ஜூன் 15) பதிலளித்த காவல்துறை, புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் விசாரணை தொடர்வதாகவும் தெரிவித்தது. சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள், இதற்கு சில நாள்களுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கியதாக நம்பப்படுகிறது. அச்சம்பவம் இடம்பெறும் பதிவுகளும் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டன.

மோட்டார் சைக்கிள் சிக்கிய சாலை விபத்து இம்மாதம் ஐந்தாம் தேதி நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து 28 வயது ஆண் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்விபத்துசேதம்விசாரணைகாவல்துறை