ஹவ்காங்கில் பேருந்து மற்றும் கார் மோதிய விபத்தில் 8 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 26) காலை 10:35 மணிவாக்கில் நடந்ததாக காவல்துறை தெரிவித்தது.
விபத்து ஹவ்காங் அவென்யூ 4 மற்றும் புவாங்கோக் கிரீன் சந்திப்பில் நடந்தது.
விபத்தில் சிக்கியது ஒரு வெள்ளை நிறக் கார் மற்றும் கோ அகெட் சிங்கப்பூரின் 43 எண்ணைக் கொண்ட பேருந்து என்று அதிகாரிகள் கூறினர்.
பேருந்தின் முன் பகுதியும், காரின் வலதுபக்கமும் சேதமடைந்திருந்தது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 8 பேரும் சுயநினைவுடன் இருந்ததாகவும் அவர்களில் இருவர் டான் டோக் செங் மருத்துவமனையிலும் 6 பேர் செங்காங் பொது மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

