யார் உரக்கப் பேசுகிறார்கள் என்பதல்ல தேர்தல்: திருவாட்டி போ

1 mins read
7d3aebc3-7866-4420-b5c2-6df73dbd05f6
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் சார்பில் போட்டியிடும் திருவாட்டி போ லி சான் - படம்: இளவரசி ஸ்டீஃபன்
multi-img1 of 2

பொதுத் தேர்தல் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்தல் உரக்கப் பேசுவதோ அல்லது ஆளுமைகளைப் பற்றியதோ அன்று; அது முன்னேற்றத்தைப் பற்றியது, என்று வலியுறுத்தினார் திருவாட்டி போ லி சான்,50.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் சார்பில் போட்டியிடும் திருவாட்டி போ, புதன்கிழமை, (ஏப்ரல் 30) மாலை எவர்கிரீன் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றினார்.

சவால் மிகுந்த பொருளியல் சூழலில் குடியிருப்பாளர்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்வதாகச் சொன்ன திருவாட்டி போ, தமக்கு வாக்களித்தால் தொகுதிக்குச் செய்யவிருக்கும் பணிகள் குறித்தும் விவரித்தார்.

இல்லங்களை நவீனப்படுத்தல், மனநலன் சார்ந்த திட்டங்களை வலுப்படுத்துதல், மூத்தோருக்கான ஆதரவைச் செழிப்பாக்குதல் எனப் பல்வேறு திட்டங்களை வாக்காளர்களுக்காக வடிவமைக்க தமக்கு வாய்ப்பு தருமாறு கோரினார் திருவாட்டி போ.

“வாக்குறுதிகளை அல்ல, வாய்ப்புகளைக் கருத்தில் கொள்ளுங்கள். தேர்தல் தினமான மே 3ஆம் தேதி, செம்பாவாங் வெஸ்ட் தனித்தொகுதிக்கான இரண்டாம் அத்தியாயத்தை எழுதும் அதிகாரம் மக்களுக்கு உண்டு,” என்றார் அவர். எனவே, மசெகவிற்கு வாக்களிகுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இத்தொகுதியில் திருவாட்டி போவை எதிர்த்து சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் சார்பாக டாக்டர் சீ சூன் ஜுவான் போட்டியிடுகிறார் .

குறிப்புச் சொற்கள்