தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தல் தொகுதி எல்லை மறுஆய்வுக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை: அமைச்சர் சான்

1 mins read
2986257b-dfcc-48a7-a812-0956f6ded423
தேர்தல் தொகுதி எல்லை மறுஆய்வுக் குழுவில் வழக்கமாக, சிங்கப்பூர் நில ஆணையம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், புள்ளிவிவரத் துறை, தேர்தல் துறை ஆகியவற்றின் ஊழியர்கள் இடம்பெற்றிருப்பர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுத் தேர்தலுக்குமுன் தொகுதி எல்லைகளை மறுஆய்வு செய்யும் ‘இபிஆர்சி’ எனப்படும் தேர்தல் தொகுதி எல்லை மறுஆய்வுக் குழு இன்னும் கூட்டப்படவில்லை என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கேள்வி ஒன்றுக்கு ஜூலை 2ஆம் தேதி எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

அந்தக் குழு கூட்டப்படும்போது அதற்கான குறிப்பு விதிமுறைகள் வரையறுக்கப்படும் என்றார் அவர்.

பாட்டாளிக் கட்சியின் செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் சுவா, ‘இபிஆர்சி’ குழுவுக்குக் குறிப்பு விதிமுறைகள் வழங்கப்பட்டுவிட்டனவா என்று கேள்வி எழுப்பியிருந்தார். எந்தக் கொள்கைகளின் அடிப்படையில் இந்தக் குறிப்பு விதிமுறைகள் வரையறுக்கப்படுகின்றன என்றும் அவர் கேட்டிருந்தார்.

முந்தைய ‘இபிஆர்சி’ குழுக்களின் குறிப்பு விதிமுறைகளின் அடிப்படையில் இக்குழு தேர்தல் தொகுதி எல்லைகளை மறுஆய்வு செய்து, தொகுதிகளின் பரப்பு, குழுத்தொகுதிகள், தனித்தொகுதிகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பரிந்துரைக்கும் என்று அமைச்சர் சான் கூறினார்.

பிரதமர் லாரன்ஸ் வோங்கின் சார்பாக அமைச்சர் சான் இவ்வாறு பதிலளித்தார்.

குறிப்புச் சொற்கள்