பிரதமர் வோங்கின் சமூக ஊடகப் பக்கங்களில் தீபாவளிக் காணொளி

பிரதமர் வோங்கின் சமூக ஊடகப் பக்கங்களில் தீபாவளிக் காணொளி

படம்: லாரன்ஸ் வோங்/இன்ஸ்டகிராம்

07 Nov 2026 - 6:41 pm

1 mins read

பிரதமர் லாரன்ஸ் வோங், தமது சமூக ஊடகப் பக்கங்களில் தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

“தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டது. இந்த ஒளித்திருநாளில் சிங்கப்பூரர்கள் சிலர் எதை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என்பதை இங்கே காண்போம். அனைவருக்கும் மகிழ்ச்சியும் அர்த்தமும் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்,” என்று சனிக்கிழமை (நவம்பர் 7) அவர் தமது பதிவில் குறிப்பிட்டார்.

‘இந்தத் தீபாவளிக்கு உங்களை எது அதிகமாக உற்சாகப்படுத்துகிறது?’ என்ற தலைப்பிலான காணொளி ஒன்றும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.

கேம்பல் லேன் தீபாவளிச் சந்தைக்கு வந்திருந்தவர்கள் இந்தக் கேள்விக்கு அளித்த பதில்கள் அக்காணொளியில் இடம்பெற்றன.

வீடுகளை அலங்கரிப்பது, உற்றார் உறவினர்களைச் சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிடுவது, சுவையான பலகாரங்களைச் சாப்பிடுவது முதலியவை தங்களுக்குப் பிடித்துள்ளதாகப் பல்வேறு வயதினரும் தெரிவித்தனர்.

இதற்கு முன்னதாக, ஜெயா ஸ்பைசஸ் கடையில் மசாலா தயாரிப்பதைக் காட்டும் காணொளியைப் பிரதமர் வோங் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்