சிங்கப்பூரின் விண்வெளி ஆய்வுகளின் எதிர்காலம் மனிதத் திறனையே அதிகம் சார்ந்தது. தொழில்நுட்பம் மட்டும் அதற்கு போதாது. சிங்கப்பூரிலேயே உருவாக்கப்படும் புதிய விண்வெளி ஆய்வுகள், அத்துறையில் மக்களுக்கு நம்பிக்கையையும் முதலீடுகளையும் ஈர்க்கக்கூடியது.
எனவே விண்வெளித் துறையில் பயணம் செய்யும் தொழில்நுட்பத் திறனாளர்கள் இங்கு தொடர்ந்து இருப்பது இன்றியமையாதது. இது உள்ளூர் கவனிப்பாளர்களின் கருத்தாகும். ஏனெனில் சிங்கப்பூரில் தொழில்துறைகள் நன்கு கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆனால் விண்வெளித்துறை அப்படிப்பட்டதல்ல என்பது இங்கு சவாலாக அமையும்.
ஏப்ரல் 1ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய விண்வெளி ஆய்வு அமைப்பு (NSAS) தொடங்கப்படுகிறது. பல்லாண்டுகளாக அத்தகைய அமைப்பை உருவாக்கவேண்டும் என்ற ஏக்கத்தோடு இருந்தோருக்கு இது தொடக்கம்மட்டுமல்ல. ஒரு புதிய தொழில்துறையின் வருகையை அவர்கள் வரவேற்கும் தருணமாகும். உலகளாவிய நிலையில் ஒரு துடிப்புமிக்க துறையாக விண்வெளிப் பொருளியல் விளங்குகிறது. இன்றைய சூழலில் S$808 பில்லியன் (US$630 பில்லியன்) இத்துறையில் செலவிடப்படுகிறது. பல முன்னணி நிறுவனங்கள் 2040ஆம் ஆண்டுக்குள் அது $1.28 டிரில்லியனை (US$1 டிரில்லியன்) எட்டும் என்று எதிர்பார்க்கின்றன.
அமெரிக்காவும் ஐரோப்பாவும் இத்துறையின் முக்கியத் தூண்களாக விளங்கினாலும் ஆசிய பசிஃபிக் வட்டாரம் இதில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக ஆசிய பசிபிக்கில் ஆண்டுக்கு 9.6% வளர்ச்சி கண்டுள்ளது.
விண்வெளித்துறையில் சிங்கப்பூர் அடைந்துவரும் ஆரம்பக்கட்ட வெற்றி, அரசாங்கம் முன்னெடுக்கும் கொள்கைகளாலும் தனியார் தொழில்வல்லுநர்களுடன் இணைந்து செயல்படுவதாலும் ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர் விண்வெளி ஆய்வு அமைப்பு $210 மில்லியன் நிதியுடன் உதயமாகிறது. விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்தின் வழியாக இந்த நிதி ஒதுக்கப்பட்டு, அதிகாரபூர்வ நிறுவனமயமாக இத்துறை ஆக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் வியக்கத்தக்க வகையில் விண்வெளித் திட்டங்களை நிறைவேற்ற உள்ளூர் நிறுவனங்களுக்கு இந்த தெளிவான உத்திபூர்வ வழிகாட்டுதல் முக்கியமாக அமைகிறது.
முதலீடுகளையும் வழிகாட்டுதலையும் தவிர்த்து, சிங்கப்பூரின் வெற்றிக்கு விண்வெளி சார்ந்த பல துறைகளில் நிபுணத்துவம் பெற்ற திறன் மேம்பாடு என்பது அடிப்படையாகும்.
தொடர்புடைய செய்திகள்
விண்வெளி எட்டாக் கனியென சிங்கப்பூரர்கள் மனதில் தயக்கம் அடையாமல் வானளவு வாய்ப்புகள் உள்ளன என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் வளர்த்து முன்செல்வதே முதலும் முக்கியமும் ஆன இலக்காகும்.
10 கிலோகிராம் முதல் 1,000 கிலோகிராம் எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களையும் அவற்றின் உபரி பாகங்களையும் தயாரிப்பதில் சிங்கப்பூரின் விண்வெளி நிறுவனங்கள் தற்போது கவனம் செலுத்துகின்றன.
பற்பல சோதனைகள் மேற்கொண்டு ஒரு செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் தேவைப்படுகின்றன. மேலும் 70 நிறுவனங்களைச் சேர்ந்த 2,000 நிபுணர்கள் அதில் செயல்படுகின்றனர்.

